1.இந்தியா கூட்டணி சார்பில் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு வாக்கு கேட்டு சனிக்கிழமையன்று (மார்ச் 30) அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வாக்கு சேகரித்தார். திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, எம்.கே.மோகன் எம்எல்ஏ, நா.ராமலிங்கம் எம்.சி., ஆகியோர் உடன் உள்ளனர்.
2.வட சென்னை மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர் ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபிநேசர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இளைய அருணா, பகுதிச் செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், இரா.செந்தில்குமார், தொகுதி பொறுப்பாளர் நவீன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, டி.வெங்கட் (சிபிஎம்), திரவியம் (காங்கிரஸ்), வெங்கடேஷ் வேம்புலி (சிபிஐ) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
3.தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சனிக்கிழமையன்று (மார்ச் 30) விருகம்பாக்கம் தொகுதியில் வாக்கு சேகரித்தார். ஏ.எம்.வி.பிரபாகரராஜா எம்எல்ஏ, திமுக நிர்வாகிகள் க.தனசேகரன், கண்ணன், ராசா, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
4.வட சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து திருவொற்றியூரில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இஸ்லாமியர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. திமுக கிழக்கு பகுதிச் செயலாளர் தி.மு.தனியரசு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல் மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநில துணைச் செயலாளர் நாசர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
சென்னையில் குடிநீர் தேவை அதிகரிப்பு
சென்னை, மார்ச் 30- கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்துள் ளது.
கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக விநியோகம் செய்யப்படுகிறது. வெள்ளி யன்று அதிகபட்சமாக 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு உள்ளது.சென்னைக்கு குடி நீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்க லாம். தற்போது குடி நீர் ஏரி களில் 8080 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் 8 மாதத்திற்கு தட்டு ப்பாடின்றி சென்னையில் குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் கூறினர்.
புழல் ஏரியில் 2813 மி.கனஅடியும், செம்பரம் பாக்கம் ஏரியில் 2838 மி.கனஅடியும், பூண்டி ஏரி யில் 1774 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது.