tamilnadu

img

அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 881 கெளரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் அறிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, அதில் 516 பேர் தற்காலிகமாக அண்மையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் அறிவித்துள்ளார்

தகுதியுள்ள நபர்கள் www.tngasa.org என்ற இணையதளம் வாயிலாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.8-ஆம் தேதி எனவும், மேலும், 21.07.2025ஆம் செய்தி அறிவிப்பின்படி, ஏற்கனவே கவுரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.