tamilnadu

img

அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம்

அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் யானைகள் வழித்தடத்தில் மதுபான கடைகள் துவங்குவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு இ-சேவை மையம் மூலம் பல முறை புகார்கள் அளித்த பின்னரும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண கொண்டு வரப்பட்ட அரசு இ-சேவை மையங்கள் காகித அளவிலேயே உள்ளது என வருத்தம் தெரிவித்தனர்.

இதையடுத்து, பொதுமக்களின் மனுக்களுக்கு பதிலளிக்காத அதிகாரிகளின் மெத்தன போக்குக்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.