வீட்டு வேலை தொழிலாளர் சங்க அண்ணாநகர் பகுதி பேரவை
சென்னை, ஆக. 18 - சென்னை மற்றும் புறநகர் வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் அண்ணா நகர் பகுதி பேரவை ஞாயிறன்று (ஆக.17) நடைபெற்றது. பேரவைக்கு பகுதிச் செயலாளர் டி.சுகுமார் தலைமை தாங்கினார். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் பகுதிச் செயலாளர் கே.வெங்கடேசன் வரவேற்றார். அஞ்சலி தீர்மா னத்தை தனபால் வாசித்தார். சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் அண்ணா நகர் பகுதிச் செயலாளர் பி.சீனிவாசன் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.சுந்தரம் நிறைவுரையாற்றினார். மங்கா நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு பகுதித் தலைவராக முனியம்மாள், செயலாளராக டி.சுகுமார், பொருளாளராக ஆர்.சுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
உத்திரமேரூரில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்
காஞ்சிபுரம், ஆக18- உத்திரமேரூரில் காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதம் கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வரு கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் சொர்ணவாரி பருவத்திற்கு சுமார் 11,000 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, உளுந்து, கேழ்வரகு, கரும்பு உள்ளிட்டவைகள் 1000 ஏக்க ருக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரி விக்கின்றனர். இந்நிலையில், இந்த பகுதிகளில் உள்ள வனம் மற்றும் ஏரிப்பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள், விவசாயி கள் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள விளை நிலங் களுக்கு இரவு நேரங்களில் கூட்டமாக வருகின்றன. அவை பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதையடுத்து, காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க, விவசாயிகள் இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பல்வேறு விலங்குகளின் சத்தங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், வெடிகள் வெடித்தும் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை குறைக்க முடி யாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.