750 கிராம் குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை
கிருஷ்ணகிரி, செப்.27 - ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கருவுற்று 25 வாரத்தில் பிறந்த 750 கிராம் எடை கொண்ட பச்சிளம் குழந்தையை காப்பாற்றி மருத்து வர்கள் சாதனை படைத்துள்ளனர். கருவுற்று 25 வாரம் மட்டுமே ஆனா தாய் ஒருவர் பிரசவ வலியில் ஜூலை 9ஆம் தேதி ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 750 கிராம் எடையுடன் குழந்தை பிறந்தது. பிரசவக் காலத்திற்கு முன்கூட்டியே குழந்தை பிறந்ததால் சுவாச பிரச்சனை, நோய் தொற்று, மூளையில் இரத்தக்கசிவு அபாயம் ஏற்படாமல் பாதுகாக்க பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டது. மருத்துவக்குழுவின் தீவிர முயற்சியால் செப். 15 அன்று குழந்தை 1.5 கிலோகிராம் எடையுடன் தாய் மற்றும் சேய் இருவரும் வீடு திரும்பினர். இந்த சவாலான சூழ்நிலையை திறம்பட கையாண்ட மகப்பேறு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தை மருத்துவர்கள், உடன் பணியாற்றிய செவிலியர்கள் ஆகியோரை மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் இராஜா முத்தையா பாராட்டியதுடன், இந்த தாய்க்கு ஏற்கனவே இரண்டுமுறை கருவுற்று கருச்சிதைவு நடைபெற்றுள்ள நிலையில், தற்போது பிரசவ காலத்திற்கு முன்பே குழந்தை பிறந்த நிலையில் சிறந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவ வசதிகள் காரணமாகவே 26 வார குழந்தையும் தாயும் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
