tamilnadu

img

தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து செங்கத்தில் தீஒமு ஆர்ப்பாட்டம்

தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து செங்கத்தில் தீஒமு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜுலை 25- தலித் மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நிகழ்த்திய சம்பவத்தை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செங்கம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா அரட்டவாடி பகுதி யில் ஆதிக்க சமூகத்தின் நிலத்தை, அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் குடும்பத்தினர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். ஆதிக்க சாதியினருக்கு உரிமையான நிலத்தில் அருந்ததியர் சமூகத்தினர் விவசாயம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அருந்ததி குடும்பத்தினர் மீது, கடந்த வாரம் ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வன்கொடுமை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து  தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வாலிபர் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. தீஒமு மாவட்ட தலைவர் எஸ். ராமதாஸ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சி.முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னணியின் மாநில துணைப் பொதுச் செய லாளர் ப. செல்வன், வாலி பர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அறி வழகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ஏ.லட்சு மணன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி. எம். பிரகாஷ், வட்டார செய லாளர்கள் பி. கணபதி, பி .சுந்தர், நிர்வாகிகள் எம். பிரகலநாதன், டி .கே. வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருந்ததிய தலித் இளைஞர் அரவிந்த் என்ப வரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியதை வன்மையாக கண்டித்தும் , தலித் பெண்களை பொதுவெளியில் வன்கொடுமை செய்த ஆதிக்க சக்திகளை கைது செய்திடவும், செங்கம் காவல்துறையின் அலட்சிய போக்கினால், தலித் இளைஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்திடவும்  வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.