tamilnadu

img

தமிழ்நாடு: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளைக் கலைக்க டிஜிபி உத்தரவு!

போலீஸ் தனிப்படைகளைக் கலைத்து டிஜிபி உத்தரவு!

காவலர்கள் தாக்குதலில் இளைஞர் பலி எதிரொலி

சென்னை, ஜூலை 2 -  சிவகங்கை மாவட்டம், திருப்புவ னம் காவல் நிலையத்தில், காவலர் களால் இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலி யாக, தமிழ்நாடு முழுவதும் காவல் துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப் படைகளைக் கலைக்க டிஜிபி உத்தர விட்டுள்ளார். இதுவரை தனிப்படை களில் பணியாற்றி வந்த ஆயி ரத்திற்கும் மேற்பட்ட போலீசார் உடனடி யாக மாற்றுப் பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி அலுவல கத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆணையர்கள், மண்டல காவல்துறை தலைவர்கள் உள்ளிட்டோ ருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள் ளது. அதில், துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், டிஎஸ்பி -க்கள் உள்ளிட்டோரின் கீழ் செயல் படும் சிறப்பு படைகள் நிரந்தரமாக செயல் படக் கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், ஏதாவது குற்ற வழக்குகள் நடைபெற்றால், அதில் துப்பு துலக்கு வதற்காக மட்டுமே துணை ஆணை யர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் டிஎஸ்பி-க்கள் ஆகியோர் தங்க ளுக்கு கீழ் பணியாற்றுவதற்கு தனிப் படைகளை அமைத்துக் கொள்ள லாம் என்றும் புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த தனிப்படையை அமைப்ப தற்கும் மண்டல காவல்துறை தலை வர்கள் மற்றும் காவல்துறை ஆணை யர்கள் ஆகியோரிடம் உரிய அனு மதி பெற வேண்டும் என்றும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படியே முக்கியமான வழக்குகளுக்கு மட்டுமே சிறப்புப் பிரிவு அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் காவல்துறையில் அதிகாரிகளுக்குக் கீழ் இயங்கும் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் கலைக்கப்படுகின்றன.