தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் 1977,80,84,89 ஆகிய நான்கு முறை திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட சேரன்மகாதேவி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980-85 வரை தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார். இதையடுத்து 1999இல் நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.