ஓய்வூதியர் சங்க மாநாட்டில் கியூபா நிதி வழங்கல்
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கடலூர் வட்ட மாநாட்டில், அமெரிக்கா பொருளாதார தடையால் கியூபா மக்கள் படும் இன்னல்கள் எடுத்துரைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஓய்வூதியர்கள் நிதி வழங்கினர். அதன்படி, ரூ. 7,300 வசூலானது. இத் தொகையை சிபிஎம் மாநகர குழு உறுப்பினர்கள் எஸ்.கே.தேவனாதன் கருணாகரனிடம் வழங்கினர். இதில், கடலூர் ஓய்வூதியர் சங்க வட்ட நிர்வாகிகள் ராமதாஸ், திருஞானசம்பந்தம், ராமானுஜம், ஜோதி, சுந்தரமூர்த்தி, வேளாண்மை துறை மாநில செயலாளர் ஆர்.மனோகரன், மாவட்டத் தலைவர் என்.காசிநாதன், மாவட்டச் செயலாளர் ஜி.பழனி, மாவட்டப் பொருளாளர் குழந்தைவேலு, கூட்டமைப்பு தலைவர் டி.புருஷோத்தமன் பங்கேற்றனர்.