tamilnadu

img

தோழர் வ.சுப்பையா சிலைக்கு சிபிஎம் மரியாதை

தோழர் வ.சுப்பையா சிலைக்கு சிபிஎம் மரியாதை

புதுச்சேரி, அக்.12 –  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரருமான வ.சுப்பையா நினைவு நாளையொட்டி, புதுச்சேரி நெல்லித்தோப்பு சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது  உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், பெருமாள், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், மாநிலக் குழு உறுப்பினர் சரவணன் உள்பட பலர் அவரது  உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்களும் வ.சுப்பையாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.