அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றம் காட்டேரியில் சிபிஎம் போராட்டம் வெற்றி
கிருஷ்ணகிரி, ஆக.19- ஊத்தங்கரை வட்டம், அனுமன் தீர்த்தத்தில் உள்ள காட்டேரி ஊராட்சி ஒன்றி யத்தில் மக்களின் அடிப்படை கோரிக்கை களை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய முன்னாள் வார்டு கவுன்சிலர் வி.கோவிந்தசாமி தலைமையில் பெருந்திரள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் கிளைச் செயலாளர்கள் பொண்ணுரங்கன், மலர், ஆறுமுகம், பால்குடி, சுமன் சுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கே.நஞ்சுண்டன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஊத்தங்கரை வட்டச் செயலாளர் ஆர். சபாபதி, மாவட்டக் குழு உறுப்பினர் கவிமணிதேவி விளக்கி பேசினர். காட்டேரி ஊராட்சியில் அனைத்து கிராமங்களிலும் தெருவிளக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், கடந்த ஆண்டு புயல், கடும் மழையில் சேதம் அடைந்த காட்டேரி ஊராட்சி, மெய்யாண்டபட்டி, ஒட்டு நீரோடை தலைப்பகுதி ஏரிகளின் கரைகள் உடைப்பை சீர்படுத்தி விவசாய பயன்பாட்டுக்கு நீரை தேக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மெய்யாண்டபட்டி அருந்ததியர் மக்க ளுக்கு ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து அமைக்கப்பட்ட குழாயை உடனடியாக சீரமைத்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இலக்கம்பட்டி தலித் மக்கள் பகுதியில் உள்ள தானியக்கலத்தை சீர்படுத்த ஒன்றிய கவுன்சிலர் நிதி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. வேலையை உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கு மேற்பட்ட பெண்கள் உட்பட பெருந்திரள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சமூக ஆர்வலர் வேடியப்பன், இலக்கம்பட்டி ஊர் பெரியவர் சாக்கன், தமிழ் புலிகள் தலித் அமைப்பு மாவட்டத் தலைவர் பூவரசன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதா, விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், பாபு, எத்திராஜ் கிருஷ்ணன், வரதராஜு பாஞ்சாலராஜன், மலர், ஆனந்தன், வேடியப்பன், காஞ்சனா, சாக்கன், சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, காட்டேரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, சிபிஎம் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் அடிப்படை யில், இம்மாத இறுதிக்குள் குடிநீர் பிரச்ச னைகள் தெருவிளக்கு ஆகியவற்றை உடனடியாக சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கரைகள் உடைந்த ஒட்டு நீரோடை தலைப்பகுதி ஏரி, குட்டைகளை உடனடியாக சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், ஊராட்சியில் மண் சாலைகளுக்கு தார் சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரின் நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் தெரி விக்கப்பட்டது. துரிதமாக பணிகள் துவங்கப்பட்டு முடிக்கப்படும், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தானியக் களம் சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதியில் உடனடியாக வேலைகள் துவங்கப் படும், கோவிலை சுற்றிலும் தென்பெண்ணை யாற்றில் கழிவுகளை அகற்ற துர்நாற்றத்தை போக்க சீர்படுத்தி, சுகாதார கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைவரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து, பெருந்திரள் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
சென்னையில் போராடிவரும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கடலூரில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.