tamilnadu

ஒருங்கிணைந்த ஓய்வூதியம்: இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு!

சென்னை, ஆக. 27 - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வரு மாறு : “ஊழியர்களை தவறாக வழி நடத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்) ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) என பெயர் மாற்றம் செய்துள்ளது இந்த புதிய திட்டம், ஆந்திரப் பிரதேசத்தின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் நகல் மற்றும் என்பிஎஸ் சீர்திருத்தத்தை மட்டுமே குறிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாது.

பழைய ஓய்வூதியத் திட்டம் (ஓபிஎஸ்) அரசியல் பிரச்சனையாக மாறி, கடந்த மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ஊழியர்களின் கோபத்தையும், அர சியல் விளைவுகளையும் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச நிவாரணம் வழங்கும் ஒன்றிய அரசின் இந்த நட வடிக்கை ஏமாற்று வியூகம் ஆகும். அரசு ஊழியர்கள், ஆசிரியர் களை ஏமாற்றும் வகையில் யுபிஎஸ் திட்டம் குறித்து அரசாணை வெளி யிட்ட ஒன்றிய பாஜக அரசை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வன்மை யாக கண்டிக்கிறது.  

ஒன்றிய அரசு கொண்டு வந்திருக் கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்தவும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறவுமான போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.