tamilnadu

img

வடசென்னையில் தோழர் எம்.கே.பாந்தே நூற்றாண்டு விழா

வடசென்னையில் தோழர் எம்.கே.பாந்தே நூற்றாண்டு விழா

தோழர் எம்.கே.பாந்தே நூற்றாண்டு விழா, உலக தொழிற்சங்க கூட்டமைப்பின் 80 ஆண்டு அமைப்பு தினம் சிஐடியு வடசென்னை மாவட்டக் குழு சார்பில் ஓட்டேரியில் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் வெள்ளியன்று (அக். 3) நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி எதிர்கால பணிகள் குறித்து பேசினார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை, மாவட்ட துணைத்தலைவர் சு.பால்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.