சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் இன்று (செவ்வாய் கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, கண்ணம்மாள், சாந்திகுமார், முரளிசங்கர், மஞ்சுளா ராமராஜூ, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம் ஆகிய 10 நீதிபதிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனால் உயர் நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது; மேலும் 12 காலியிடங்கள் உள்ளது.