தென் தமிழக பகுதிகளில் டிசம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக டிசம்பர் 2 ஆம் தேதி கரையை கடக்கிறது., பின்பு, குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது. எனவே, தென்மேற்கு வாங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது..
ஏற்கனவே, நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் முழுமையான சீரமைப்புகள் நடைபெறவில்லை. தற்போது, மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்புள்ளது.