tamilnadu

கார் உற்பத்தி ஆலைக்காக டாடா நிறுவனம் ரூ.914 கோடி முதலீடு

சென்னை, ஜன.2- தமிழ்நாட்டில் பெரிய கார் உற்பத்தி ஆலைக்காக முதற்கட்டமாக ரூ.914 கோடி  முதலீடு செய்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்  பந்தம் மேற்கொண்ட டாடா  மோட்டார்ஸ் நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டத் தில் பணப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவில் புதிய ஆலையை அமைப்பதாக தெரிவித்தது.  இந்த ஆலை  செயல்பாட்டுக்கு வந்தால்  சுமார் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்  நிலையில், டாடா மோட்  டார்ஸ் நிறுவனம் முதற்கட்ட மாக இந்த ஆலைக்கு ரூ. 914 கோடி முதலீடு செய்ய  உள்ளதாக தெரிவித்துள் ளது. இந்த புதிய ஆலை அடுத்த தலைமுறை சொகுசு  பிரீமியம் கார்கள் மற்றும்  புதிய மின்சார வாகனங்க ளின் உற்பத்திக்கான மைய மாக செயல்படும் என்றும்  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.