tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்க! மாநிலம் முழுவதும் மின்ஊழியர்கள் போராட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்க! மாநிலம் முழுவதும் மின்ஊழியர்கள் போராட்டம்

சென்னை, அக. 19 - ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக்கோரி செவ்வாயன்று (ஆக.19) தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவல கங்கள் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின் நுகர்வோர்களை பதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், மின் வாரியத்தை தயார்மயமாக்கும் அர சாணை 6 மற்றும் 7 ஆகிய வற்றில் திருத்தம் செய்ய வேண்டும், மின்வாரியத்தில் தனியார்மயத்தை அனு மதிக்கக் கூடாது, முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதி களை களைய வேண்டும் ஆகிய கோரிக்கைளை வலி யுறுத்தி இந்தப்போராட்டம் நடைபெற்றது. தென்சென்னை கிளை கள் 1-2 சார்பில் கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. கிளை  -1ன் தலைவர் டி.பண்டா ரம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் தி.ஜெய்சங்கர், மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், கிளை-1ன் செயலாளர் குமார், பொரு ளாளர் பழனி, கிளை-2 தலை வர் டில்லிகுமார், செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை உள்ளிட்டோர் பேசினர். மத்தியசென்னை கிளை சார்பில் வள்ளுவர் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இணைச் செயலாளர் பி.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், கிளை செயலா ளர் கே.பரந்தாமன், பொரு ளாளர் என்.கௌரி, கோட்டத் தலைவர்கள் எம்.ஜான்ராஜ் (மயிலாப்பூர்), பி.தேவராஜ் (தி.நகர்) உள்ளிட்டோர் பேசினர். மேற்கு கிளை மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை மேற்கு கிளை சார்பில் திருமங்க லம் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசியே ஷன் மாநில பொதுச்செய லாளர் கே.அருள்செல்வன், மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாநில துணைத் தலை வர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ், மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.தசரதன், தமிழ்நாடு மின்சார வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜேஷ்கண்ணா நிர்வாகிகள் ஜி.குப்பன், கே.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வடக்கு கிளை மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு கிளை சார்பில் தண்டையார்பேட்டை கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாநில துணைத் தலை வர் எம்.சாலட், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் மதன் கோபால் நிர்வாகிகள் திருநீர்செல்வம், கே.வெங்க டைய்யா, சத்தியமூர்த்தி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.