வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

விவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல்...

சென்னை:
இந்திய விவசாயத்தை சீர்குலைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளவேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து போராட அனைத்து தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. இதுகுறித்து சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எச்எம்எஸ், ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, ஏஐசிசிடியு,டியுசிசி, எம்எல்எப், எல்டியுசி ஆகிய அனைத்துதொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேளாண்மை தொடர்பான இரண்டு மசோதாக்களை மத்திய அரசு நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்து, குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேறிவிட்டதாக சொல்லி நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அரசு படுகொலை செய்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் வெளிநடப்பு செய்த பின்பு மூன்றாவதாக ஒரு மசோதாவையும் சட்டமாக்கி இருக்கிறது.இந்தச் சட்டங்கள், வேளாண் பொருளா தாரத்தைச் சீர்குலைத்துவிட்டன. பன்னாட்டு நிறுவனங்களும், பிரம்மாண்டமான நில முதலாளிகளும் இந்திய விவசாய விளைபொருட்களை யும், சந்தையையும் கட்டுப்படுத்துவதற்கான முழு அதிகாரத்தை இந்த சட்டங்கள் தந்துள்ளன. இந்திய விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் உரிமைகளை கொன்றொழி க்கின்றன. பதுக்கலையும் கள்ளச்சந்தையையும் இவை சட்டப்பூர்வமாக்கிவிட்டன.

நாட்டில் உணவு பாதுகாப்பு பெரும் ஆபத்துக்குள்ளாகிறது. வேளாண் உற்பத்திக்கு வெளியிலுள்ள நுகர்வோரான சாமானிய மக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அதானி, வால்மார்ட், அம்பானியின் ரிலையன்ஸ், வில்மர், பிர்லா, ஐடிசி போன்ற அந்நிய மற்றும் உள்நாட்டு பெரு வணிக நிறுவனங்களின கொள்ளை லாபத்துக்கு இது வழிவிடுகிறது.இந்தியாவின் கிராமப்புற உழைக்கும் மக்களான விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்ட இந்தக் கொடூரத்தாக்குதலை தொழிற்சங்கங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், விவசாயிகள் தமது போராட்டங்களில் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்து கிறோம்.இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் பல்வேறு விவசாய, விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் செப்டம்பர் 25ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.தமிழ்நாடு முழுமையிலும் செப்டம்பர் 25 மற்றும் 28ல் நடக்கும் விவசாயி, விவசாயத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் அனைத்தும் முழுமையாக பங்கேற்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;