பல்லிகளை ஏமாற்றும் பட்டாம் பூச்சிகள்
வெப்ப மண்டல பல்லிகள்,ஓணான்கள் போன்றவை பட்டாம்பூச்சியை விரும்பி உண்கின்றன. அவற்றை ஏமாற்றுவதற்காக லிசியானேடே எனும் குடும்பத்தை சேர்ந்த பட்டாம்பூச்சிகள், பின்புறம் கண்கள், தலை என ஒரு போலி வடிவமைப்பை உண்டாக்கிக் கொள்கின்றனவாம். இது குறித்து திருவனந்தபுரத்திலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுக்கு கழகத்தை சேர்ந்த தருணகிஷ்வர் யும்னம் மற்றும் உல்லாஸ் கோதண்டராமையாஆகிய இரண்டு பூச்சியியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். பட்டாம்பூச்சியின் சாறும் சத்தும் நிறைந்த உடல் பகுதியே இரையெடுக்கும் ஓணான்கள் விரும்புவது. ஆனால் இந்த போலி அமைப்பினால் அவை பின் இறகிலுள்ள செதில்களை வாய் முழுவதும் நிறைத்துக் கொள்கின்றன. இந்த போலி உருவ அமைப்பில் போலி உணர்விழைகள், பின்னிறகில் புள்ளிகள், குழப்பும் வண்ணங்கள், போலி தலை மற்றும் கோடுகள் என பலதரப்பட்ட விதங்கள் உள்ளன. ஆய்வில் இந்த அம்சங்களில் இணை கோடுகள் தவிர மற்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக பரிணாமம் அடைந்தன; பல தலைமுறைகளுக்கு இது தொடர்ந்து காலப்போக்கில் மிக விரிவாக மாறின என்று தெரிய வந்துள்ளது. Proceedings of the Royal Society B என்கிற இதழில் வந்துள்ளதாக சயின்ஸ் அலர்ட் கூறுகிறது
