tamilnadu

img

மக்கள் போராட்டத்தையடுத்து அரசு பேருந்து இயக்க அதிகாரிகள் ஒப்புதல்!

மக்கள் போராட்டத்தையடுத்து அரசு பேருந்து இயக்க அதிகாரிகள் ஒப்புதல்!

திருவண்ணாமலை,ஆக.18- ஆரணியில் இருந்து சம்பவ ராயநல்லூர் கிராமம் வழியாக சந்த வாசல் பகுதிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்த முயன்றதைத் தொடர்ந்து, உடனடியாக அரசு பேருந்து இயக்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம், கைத்தறி நெசவு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை வச திக்காக ஆரணியிலிருந்து காமக்கூர் - சாம்புவராய நல்லூர் - சேதாரம்பட்டு - ஏகாம்பரநல்லூர் வழியாக சந்தவாசல், படவேடு பகுதிக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள  ன்று செம்பகராயநல்லூர் கிராமத்திலிருந்து ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபயணமாக சென்று போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் திட்ட மிட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், திரு வண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர் சங்கம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு நிர்வாகிகள் சங்கர், அசோக்குமார், சுதா, அர்ஜுனன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆரணி வருவாய் கோட்டாட்சியர், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், காவல்துறை ஏடிஎஸ்பி பழனி உள்ளிட் டோர் வருகை தந்து போராட்டம் நடத்த முற்பட்ட சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இன்னும் 20 நாட்களுக்குள் சம்புவராயநல்லூர் கிராமம் வழியாக அரசு பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப்  பூர்வமாக உறுதியளித்த தைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த இயக்கத்தில் பட்டு கைத்தறி நெசவாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம். வீரபத்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் சி.ரமேஷ்பாபு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே. கே. வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் எம். பிரகல நாதன், சிஐடியு நிர்வாகி கள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், கே. பாண்டி யராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.