tamilnadu

img

விற்பனைக்கு ஏற்ப கடைகளுக்கு ஊழியர்கள் நியமனம் செய்திடுக

விற்பனைக்கு ஏற்ப கடைகளுக்கு ஊழியர்கள் நியமனம் செய்திடுக

ஊழியர் சங்க மாவட்ட பேரவை வலியுறுத்தல்

சென்னை, ஆக.19- விற்பனைக்கு ஏற்ப கடைகளுக்கு ஊழி யர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று சென்னை பெருநகர டாஸ்மாக் ஊழியர் சங்க மத்தியசென்னை மாவட்ட பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் 2வது ஆண்டு பேரவை செவ்வா யன்று (ஆக.19) புரசை வாக்கத்தில் நடைபெற்றது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு அறிவித்த ரூ.2ஆயிரம் மாத ஊதிய உயர்வை பாகுபாடின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரவைக்கு சங்கத் தலைவர் பி.சுந்தரம் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் பன்னீர் செல்வம் வர வேற்றார். அஞ்சலி தீர்மானத்தை துணைச் செயலாளர் தமிழ்செல்வன் வாசித்தார். சிஐடியு மத்தியசென்னை துணைத் தலைவர் ஜெ.பட்டாபி பேரவையை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை செயலாளர் எஸ்.பூரா சாமியும், வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் பி.வடிவேலும் சமர்ப்பித்த னர். டாஸ்மாக் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே. திருச்செல்வம் நிரைவுரை யாற்றினார். துணைச் செய லாளர் விஜயகுமார் நன்றி கூறினார். சங்கத்தின் தலைவராக பி.சுந்தரம், செயலாளராக பூராசாமி, பொருளாளராக பி.வடிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.