ராயபுரம் ராம்தாஸ் நகரில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்துவதை கைவிடுக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை, செப். 23- ராயபுரம் ராம்தாஸ் நகரில் ராம்கி நிறுவ னத்தின் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்துவதை கைவிட வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் மிண்ட் பேருந்து நிலையம் அருகே செவ்வா யன்று (செப்.23) ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ராயபுரம் 53ஆவது வட்டத்திற்குட்பட்ட ராம தாஸ் நகர் 70 ஆண்டுகள் பழமையான ஒரு பகுதி யாகும். கடந்த ஆண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மும், தமிழக அரசும் அங்கு வசிக்கும் மக்களை காலி செய்து, அருகில் கட்டப்பட்ட மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் குடியமர்த்தப் பட்டார்கள். தற்போது காலி செய்யப்பட்ட அந்த பகுதி யில் ராம்கி நிறுவனத்தின் குப்பை சேகரிக்கும் வாக னங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டி ருக்கிறது. இந்தப் பகுதியை சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அருகில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு குப்பைகள் சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றம் செய்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகும். மேலும் தொற்று நோய் ஏற்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர். இதுபோன்று குடி யிருப்புகளை காலி செய்து விட்டு, குப்பைக் கழிவு களை கொட்டுவது அல்லது கார் பார்க்கிங்காக மாற்றும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிவாகமும், அரசும் ஈடுபடுகிறது. இது சரியான நடவடிக்கை இல்லை. எனவே அந்த திட்டத்தை கைவிட்டு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில், ஏற்கெனவே உறுதியளித்த அடிப்படையில் ராமதாஸ் நகரில் மூலக்கொத்தளம் திட்டப்பகுதி நுழைவு வாயில், சிறுவர் விளை யாடுவதற்கான விளை யாட்டு பூங்கா, நூலகம், உடற்பயிற்சி கூடம், சாலையோர நடைபயிற்சி பூங்கா ஆகியவற்றை அமைத்துத்தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் செயற்குழு உறுப்பினர் ஆர்.லோக நாதன், பகுதிச் செய லாளர் எஸ்.பவானி, நிர்வாகி கள் டி.வெங்கட், ஜுகைப், முருகேசன், ஜெயவேல், ராஜா, எம்.எஸ்.திரவியம் (காங்கிரஸ்), சீனிவாசன், தஸ்தாபாய், என்.ஆர்.மொய்தீன்(மனிதநேய மக்கள் கட்சி) , சி.பி.ராம ஜெயம்(அமமுக)உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.