tamilnadu

தமிழ்நாட்டை நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாற்றுவோம் : தங்கம் தென்னரசு

சென்னை,பிப்.19- எதிர்வரும் ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு இந்த அரசு முன்னெடுப்புகளைச் செய்யும் என்று மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு 2024- 25ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை திங்களன்று (பிப்.19) தாக்கல் செய்து உரையாற்றினார்.  தனது உரையில் வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை குறித்து அமைச்சர் கூறுகையில், ஒன்றிய  அரசு  நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுத லும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப் பட்டுள்ளன. 2024-25 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,55,584.48 கோடி ரூபாய்  அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்ட மிட்டுள்ளது. மேலும், 49,638.82 கோடி  ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை  அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளை வாக, 31.03.2025 அன்று நிலுவையில் உள்ள கடன் 8,33,361,80 கோடி  ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளதாக கூறினார். மேலும், கடன்‌ வாங்கும்‌ வரம்பு குறித்து ஒன்றிய அரசு  கடுமையான நிபந்தனைகளை விதிப்ப தன்‌ மூலம்‌, வளர்ச்சித்‌ திட்டங்களுக்காக நிதி ஆதாரங்களை திரட்டும்‌ மாநில அரசின்‌ அதிகாரத்தையும்‌ ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடனை திருப்பிச்செலுத்தும் திறன்

2024-25 ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இது 26.41 விழுக்காடு என்றும் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் விகிதம் 2025-26 ஆம் ஆண்டில் 25.75 விழுக்காடாகவும், 2026-27 ஆம் ஆண்டில் 25 விழுக்காடா கவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது. இவ்வாறு, சீரிய நிதி மேலாண்மையின் ஒரு பகுதியாக கட னைத் திருப்பிச் செலுத்துவதற்கான திற னை தக்கவைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

மானியச் செலவு உயர்வுக்கு காரணம் என்ன?
கடந்த ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அப்போதைய நிதியமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன், 2023-25 நிதி ஆண்டில் ரூ.4.03 லட்சம் கோடி மானியங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இது ரூ.50 ஆயிரம் கோடி அதிகரித்து, ரூ.4.53 லட்சம் கோடியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 2024-25 நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் மானியச் செலவு ரூ.1.47 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். இதற்கு காரணம், மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் ஆண்டு முழுவதும் செயல்படுத்தப்படுவது, பெண்களுக் கான இலவசப் பேருந்து திட்ட விரிவாக்கம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் ரூ.1000 ஊக்கத்தொகை ஆகியவற்றால் இந்தச் செலவு அதிகரித்துள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காலதாமதம் செய்யும் ஒன்றிய அரசு
ஜிஎஸ்டி-யால் ஒரு ஆண்டுக்கு தமிழ் நாட்டிற்கு 20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்க ஒன்றிய அரசு காலதாமதம் செய்வதால், தமிழ் நாடு அரசுக்கு ரூ.9,000 கூடுதல் செல வினம் ஏற்படுகிறது. முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் சூழலும் உள்ளது மாநில அரசு கடன்பெற ஒன்றிய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன.

பேரிடர் நிவாரண நிதி வரவில்லை
தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. அரசின் வரு வாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடி யாக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக் குறை ரூ.1,08,690 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 3.46 விழுக்காடு. கடும் சவால்களுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை அரசு குறைத்துள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் வருவாய் பற் றாக்குறை இல்லாத மாநிலமாக தமி ழகத்தை மாற்றுவதற்கு அரசு முன் னெடுப்புகளை  மேற்கொள்ளும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. 

ஏற்றுமதி, மின்னணு பொருட்கள், மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளதால்  தடை களை தாண்டி வளர்ச்சியை நோக்கி அரசு பயணிக்கும் என்பதை உணர்த்தும் பட்ஜெட் இது என்றும் அமைச்சர் கூறினார். 

ஒன்றிய அரசின் கடுமையான நிபந்தனைகள்
நடப்பு ஆண்டில்‌ ஏற்பட்ட இரு தொடர்‌ பேரிடர்கள்‌ ஏற்படுத்திய பாதிப்பு, இந்தச் சூழ்நிலையை மேலும்‌ மோசமடையச்‌ செய்து, மாநிலத்தின்‌ நிதி நிலைமையை கடுமையாக பாதித்துள்ளது. தேவை யான நிவாரணத்‌ தொகையை வழங்கு வதற்கும்‌, தற்காலிக மற்றும்‌ நிரந்தர சீரமைப்புப்‌ பணிகள்‌ மேற்கொள்வதற் கும்‌ எதிர்பாராச்‌ செலவினம்‌ ஏற்பட்டு ள்ளதுடன்‌, குறிப்பிடத்தக்க அளவில்‌ வருவாய்‌ இழப்பும்‌ ஏற்பட்டுள்ளது. பல முறை ஒன்றிய அரசிடம்‌ கோரிக்கை விடுக்கப்பட்டபோதும்‌, தேசிய பேரிடர்‌ நிவாரண நிதியிலிருந்து எந்தவொரு நிதி யையும்‌ மாநில அரசுக்கு இதுவரை வழங்கவில்லை. மாநிலத்தின்‌ எதிர்பார்ப்பு க்கு நேர்மாறாக, மாநில அரசின்‌ நிதி நிலையை மேலும்‌ பாதிக்கும்‌ வகையில்‌, கடன்‌ வாங்கும்‌ வரம்பு குறித்து ஒன்றிய அரசு கடுமையான நிபந்தனைகளை விதி ப்பதன்‌ மூலம்‌, வளர்ச்சித்‌ திட்டங்களுக் காக நிதி ஆதாரங்களை திரட்டும்‌ மாநில அரசின்‌ அதிகாரத்தையும்‌ ஒன்றிய அரசு கட்டுப்படுத்துகிறது.

இத்தகைய கடுமையான நிபந்தனை களுள்‌ ஒன்றின்‌ விளைவாக, நடப்பு ஆண்டில்‌, தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மானக் கழகத்துக்கு மாநில அரசு, இழப்பீட்டு நிதியாக 17,117 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிபந்த னையை நிறைவேற்றத்‌ தவறும்‌ நேர்வில்‌ அதற்கு இணையான தொகை மாநி லத்தின் கடன்‌ வாங்கும்‌ வரம்பிலிருந்து கழிக்கப்படும்‌. மேலும்‌, இதேபோன்று அடுத்த நிதியாண்டிலும்‌ தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகத்துக்கு இழப்பீட்டு நிதியாக 14,442 கோடி ரூபாய்‌ வழங்கப்பட வேண்டும்‌.

மின்‌ துறையில்‌ சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இந்த அரசு உறுதி கொண்டுள்ள அதே வேளையில்‌, இத்த கைய நிபந்தனை, மாநில அரசின்‌ நிதி நிலையின்‌ மீது பெரும்‌ சுமையை ஏற் படுத்தி, வளர்ச்சிப்‌ பணிகளுக்கான நிதி  ஒதுக்கீட்டை பாதிக்கிறது. கடந்த காலத் தில்‌ நடைமுறைப்படுத்தப்பட்ட உதய்‌ (UDAY) திட்டத்தினைப்‌ போன்று, இந்தத்‌ தொகையினையும்‌ நிதிப்‌ பற்றாக்குறை மற்றும்‌ கடன்‌ உச்சவரம்பு கணக்கீட்டிலிருந்து நீக்கம்‌ செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மாநில  அரசு ஒன்றிய அரசிடம்‌ முன்வைத்துள் ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்ன ரசு கூறினார்.