tamilnadu

img

ஆவுடையார்கோவில் அருகே ஆயிரமாண்டு பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

ஆவுடையார்கோவில் அருகே ஆயிரமாண்டு பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, ஆக. 18-  புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம்  ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாள வயல் சுப்பிரமணியர்கோவில் வடபுற முள்ள கருவேல முட்புதரில், புதுக் கோட்டை தொல்லியல் ஆய்வு கழ கத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் மகா வீரர் சிற்பத்தை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல் அறிவியல் துறை ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணி கண்டன் கூறியதாவது,  வெள்ளாள வயலில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் இந்த சிற்பம் 124 செ. மீ. உயரமும், 72 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. சிற்ப அமைதியின் அடிப்படையில் ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வழிபாட்டிற்கு வந்ததாக இருக்கலாம்.  மூன்று சிம்மங்கள் சுமந்த இணை யரி ஆசனத்தில் அமர்ந்த நிலையில் மகாவீரர் காட்சியளிக்கிறார். அவரது பின்புறம் பக்கத்திற்கு ஒன்றாக சிம்ம யாளி தாங்கிய திண்டும், அதன் மேல் மகரவாய்களும் காணப்படுகின்றன. இயக்கன் மாதங்கனும், இயக்கி சித்தாயிகாவும் சன்ன வீரம் பூண்டு இரு புறங்களிலும் கவரி வீசுகின்றனர்.  மகாவீரர் சாந்தமான முகத்துடன், ஞானமே வடிவாய் பிரபாவளையம் எனும் ஒளிவட்டத்துடனும், தலைக்குச் சற்று மேலாக முக்காலத்தையும் உணர்த்தும் முக்குடை வேலைப் பாட்டுடனும், மலர்களுடைய அசோக மரத்தின் சுருள்சுருளான கிளைகளுட னும் தியான நிலையில் சாந்தமான முகத்தோற்றத்துடன், கருங்கல்லில் மகாவீரர் முற்கால சோழர் கலைப் பாணியில் செதுக்கப்பட்டுள்ளார்” என அவர் கூறினார். இந்த ஆய்வின் போது சிற்பம் இருக்கும் இடத்திற்கு நேரில் வந்து ஆய்விற்கான ஆலோசனைகளை சமண பௌத்த ஆய்வாளர் முனைவர் ஜம்புலிங்கம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.