100 நாள் வேலையை 200 நாட்களாக்கவேண்டும், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வட்டாட்சியரிடம் கிருஷ்ணகிரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் எஸ்.கவிதா தலைமையில்,மாவட்ட செயலாளர் டி.எம்.ராதா கோரிக்கைகளை விளக்கிப்பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் ஆர். புனிதா, நிர்வாகி வி.புனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
