குறுகிய காலத்தில் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை
23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை 2026ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தற்போதே சூடு பிடித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”2026ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை தற்போதே அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 1 மில்லியன் (10 லட்சம்) டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. போட்டியை நடத்தும் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளின் ரசிகர்கள் அதிகமாக டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். அதே போல இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் ரசிகர்களும் டிக்கெட் விற்பனை யில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்” என அதில் கூறப்பட்டுள்ளது.