வாலிபர் சங்க அன்னூர், சூலூர் மாநாடுகள்
கோவை, ஜூலை 27- வாலிபர் சங்கத்தின் அன்னூர் மற்றும் சூலூர் இடைக்கமிட்டி மாநாடுகளில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றிய 11 ஆவது மாநாடு, அவிநாசி சாலையிலுள்ள மகரிஷி மஹாலில் ஞாயிறன்று நடைபெற் றது. முன்னதாக, பயணியர் மாளிகை முன் பிருந்து மாநாட்டு அரங்கம் வரை, மக்களின் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி இளைஞர்களின் பேரணி நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு ஒன்றியத் தலைவர் பிரதீப் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அர்ஜூன் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், அரசு தாலுகா மருத்துவமனையில் உடல் கூறாய்வு மையம், ரத்த வங்கி, கண் சிகிச்சை, எலும்பு முறிவு மற்றும் நரம்பியல் மருத்துவர்களை நியமனம் செய்து, 24 மணி நேர மருத்துவ சேவையை வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம், இலவச நாப்கின் வழங்க வேண்டும். அன்னூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக ரமேஷ், செயலாளராக லோகேந்திரன், பொருளாள ராக ரூபா உட்பட 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டப் பொருளாளர் தினேஷ்ராஜா நிறைவுரையாற்றினார். இதேபோன்று, வாலிபர் சங்கத்தின் சூலூர் தாலுகா 22 ஆவது மாநாடு காமாட்சிபுரத்தில் பேரணி யுடன் துவங்கியது. தாலுகா தலைவர் ஏ.பிரவீன் குமார் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். எஸ். கோகுலகண்ணன் மற்றும் கே.சௌபர்ணிகா ஆகி யோர் தலைமை வகித்தனர். கிளைச் செயலாளர் கார்த்திக் ராஜா வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.என்.ராஜா துவக்கவுரையாற்றினார். தாலுகா செயலாளர் எஸ்.குருசாரதி, பொருளாளர் ஜி.உதயபாரதி ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் சிறப்பு ரையாற்றினார். இம்மாநாட்டில், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். சூலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் தாலுகா தலைவராக ஏ.பிரவீன் குமார், செயலாளராக எஸ்.குருசாரதி, பொருளாளராக ஜி.உதயபாரதி, துணைத்தலைவர்க ளாக எஸ்.ரவிதாஸ், ஏ.சந்திரலேகா, துணைச்செய லாளர்களாக எஸ்.கோகுலகண்ணன், கே.சௌபர் ணிகா உட்பட 15 பேர் கொண்ட தாலூகா குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் எம்.மணிபாரதி நிறைவுரையாற்றினார்.