100 நாள் வேலை திட்ட சம்பளப்பாக்கியை வழங்க வலியுறுத்தல்
தருமபுரி, ஜூலை 20- 100 நாள் வேலை திட்டத் தொழிலா ளர்களுக்கான சம்பளப்பாக்கியை விரைந்து வழங்க வேண்டும் என விவ சாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத் தியுள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட்டம், முத்து இல்லத்தில், சங் கத்தின் மாவட்டத் தலைவர் கே. கோவிந்தசாமி தலைமையில் ஞாயி றன்று நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலத் துணைத்தலைவர் ஜி.கண பதி, மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்ட நிர்வாகிகள் இ.கே. முருகன், ஜி.பாண்டியம்மாள், பி.கிருஷ்ண வேணி, சி.ராஜா, எம்.கணேசன், கே. குமரேசன், தீ.மாரியப்பன் ஆகியோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில், தரும புரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினக்கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். இத்திட்டத்தை அனைத்து பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். நூறுநாள் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு சம்பளபாக் கியை விரைந்து வழங்க வேண்டும். மேலும், பணியிடங்களில் நிழற்கூடம், குடிநீர், மருத்துவ வசதி செய்துதர வேண்டும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் விவசாயக்கூலி தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க முன்னுரிமை வழங்க வேண் டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக வி. ரவி, மாவட்டப் பொருளாளராக என். பி.முருகன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.