பெரிச்சிபாளையம் பள்ளியில் துளிர் வினாடி வினா போட்டி
திருப்பூர், ஆக. 30 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருப்பூர் தெற்கு கிளையின் சார்பில் வட்டார அளவிலான துளிர் வினாடி வினா போட்டி திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி உயர்நி லைப் பள்ளியில் சனியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச் சிக்கு கிளையின் தலைவர் சுதா தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் செல்வராஜ் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளவரசி, மாவட்ட பொருளாளர் கார்த்திக், வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் கெளரி சங்கர் போட்டியின் நோக்கம் பற்றி விளக்கினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் அண்ணா துரை போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டியை அறிவி யல் இயக்க பொறுப்பாளர்கள் சந்தோஷ், கனகராஜா, ரவி, சத்யவாணி, இர்பான் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பல் வேறு பள்ளிகளில் இருந்து நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வட்டார அளவில் வெற்றி பெற்றோர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். நிறைவாக கருத்தாளர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.