tamilnadu

img

போராட்டத்தால் சிவந்த கோவை மண்: தொழிற்சங்க  நாட்குறிப்பு தொடர்...உயர்த்திடுக டி.பாலன் சங்கத்தின் போராட்ட வரலாறு!

போராட்டத்தால் சிவந்த கோவை மண்: தொழிற்சங்க நாட்குறிப்பு தொடர்...உயர்த்திடுக டி.பாலன் சங்கத்தின் போராட்ட வரலாறு!

கோவை மாவட்டத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடியான கோவை மாவட்ட ஜெனரல் இன்ஜினியரிங் அண்டு மெக்கானிக்கல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு), எண்ணற்ற அடக்குமுறை களையும் தியாகங்களையும் கடந்து எழுந்து நிற்கிறது.  பிஎஸ்ஜி, டெக்ஸ்டூல், எல்எம்டபிள்யு போன்ற வடக்குப் பகுதி ஆலைகளில் நடை பெற்ற போராட்டங்களைப் போலவே, கோவையின் தெற்குப் பகுதிகளிலும் தொழிற்சங்கப் போராட்டங்கள் கொழுந்து விட்டன. யூனிவர்சல் ரேடியேட்டர் போன்ற நிறு வனங்களில் சிஐடியு சங்கத்தைத் துவக்க நிர்வாகத்தின் கடுமையான எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், தொடர் போராட்டங்களுக்குப் பின்னரே சங்கம்  அங்கீகரிக்கப்பட்டது. சங்கத்தின் முயற்சி யால், படிப்பறிவற்ற தொழிலாளர்களுக்கு அடிப்படை கல்வி கற்றுத்தரப்பட்டு, அவர் கள் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டது ஒரு பொற்கால அத்தியாயம். இன்ஜினியரிங் சங்கத்தின் உறுதியான அடித்தளத்திற்கு வழிவகுத்தவர் தோழர் டி. பாலன். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், 1961 முதல் 1982 வரை சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். போனஸ் என்பது முதலாளிகளின் ‘அன்ப ளிப்பு’ அல்ல, அது சட்டப்படியான உரிமை  என்பதை உறுதிப்படுத்தப் போராடினார். தொழிலாளியின் அனைத்து அத்தியாவசியச் செலவுகளையும் கணக்கிட்டு, போனஸ்  வழங்க வேண்டும் என்ற ஒரு புதிய வழிமுறை யைக் கண்டறிந்து முன்வைத்தார். போனஸ் உச்சவரம்பு 44 சதவிகிதமாக இருக்க வேண் டும் என்றும் வாதிட்டார். இதுவே இன்றும் பாலன் பார்முலா என நிலைத்துவிட்டது. எவரெஸ்ட் போராட்டம்: ஆயுள் தண்டனை பெற்ற தியாகிகள் மலுமிச்சம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த எவரெஸ்ட் நிர்வாகம், கூடுதல் நேர வேலைக்குச் சம்பளம் தராமல், உணவிற் காக வெறும் ரூ.3 மட்டுமே வழங்கியது. இதை எதிர்த்து சிஐடியு, ஏஐடியுசி சங்கங்கள் இணைந்து, ரூ.5 ஆக உயர்த்தித் தரக் கோரி உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தை அறிவித்தன. 1982 செப்டம்பர் 2 அன்று, நிர்வாகம் வெளியாட்களைக் கொண்டு ஆலையை இயக்க முற்பட்டபோது மோதல் வெடித்தது.  இந்த மோதலில், சிஐடியு தலைவர் எஸ். கருப்பையாவின் மார்பில் கத்தியால்  குத்தப்பட்டது. நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில், சிஐடியுவைச் சேர்ந்த எஸ்.கருப் பையா, பி.கோவிந்தராஜ், கே.பாலசுந்தரம், கே.சப்பானி, தனுஷ்கோடி உள்ளிட்ட 39 பேர் மீதும், ஏஐடியுசி நிர்வாகிகளைச் சேர்ந்த 17 பேர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டது. உயர்நீதிமன்றம் எஸ்.கருப்பையா, ஆர்.பாலகிருஷ்ணன் உட்பட நான்கு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஏழு பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தது. 1994ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றம் எஸ். கருப்பையா, ஆர். பாலகிருஷ்ணன் இரு வரையும் விடுதலை செய்தது. பி. கோவிந்த ராஜ், கே. பாலசுந்தரம் ஆகிய இருவருக்கும் 10  ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய் தது. பி. கோவிந்தராஜ், கே. பாலசுந்தரம் இருவரும் தண்டனைக் காலம் முடியும் வரை சிறையில் இருந்து புரட்சிகர இயக்கத்தின் வீரப்புதல்வர்களாக வெளியே வந்தனர்.  தியாகி ராக்கியண்ணன் மதுக்கரை சிமெண்ட் ஆலையில் பணி யாற்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் தியாகி ராக்கியண்ணன், தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களையும் கால்நடைகளையும் அப கரித்த உள்ளூர் நிலச்சுவான்தாரரை எதிர்த் துப் போராடினார். இதனால் வெஞ்சினம் கொண்ட ஆதிக்க கும்பலால், 1957 ஜூலை  24 அன்று வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த அவர் படுகொலை செய்யப் பட்டார். இவ்வாறான அடக்குமுறைகளை எதிர்கொண்டே தொழிற்சங்க இயக்கம் முன்னேறி வந்துள்ளது. நவீன யுகத்தில் சிஐடியுவின் எழுச்சி ஒப்பந்தத் தொழிலாளர் முறையும், கூடுதல் சுரண்டலும் மேலோங்கின. பாது காப்பற்ற சூழலில் தொழிலாளர்கள் சங்கங் களில் திரளத் தயங்கினர். இந்த இக்கட்டான சூழலில், கோவை மாவட்டத்தின் தெற்குப்  பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழி லாளர்களைத் திரட்ட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டு, மலுமிச்சம் பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு, தோழர் டி. பாலன் நினைவாக டி. பாலன் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது. புலம்பெயர்ந்தோர் நம்பிக்கை நட்சத்திரம் செங்கொடி சிஐடியு மாவட்டச் செயலாளரும், புலம்பெயர்ந்தோர் சங்க நிர்வாகியுமான எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தத் தெற்குப் பகுதியில்தான் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சங்கம் உருவா னது. செட்டிபாளையம் நாகலட்சுமி பைராலி சிஸ் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்த தில் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியான சம்பவம், எங்களின் ஆவேசத்தை  உருவாக்கியது. எந்த ஒரு துணையும் இல்லாத, முகம் அறியாத தொழிலாளர்க ளின் குடும்பத்திற்குக் உரிய நிவாரணம் வழங்கக் கோரி, அரசு மருத்துவமனை முன்பு  மறியல், ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் எனத் தீவிரமாகச் செயல்பட் டோம். அதன் விளைவாக ரூ.16 லட்சத்தை நிவாரணமாகப் பெற்றுத் தந்தோம்.” இதனைத்தொடர்ந்து, இறந்தவர்களி மீது செங்கொடி போர்த்தப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்தினர், “எங்க ளுக்கு நம்பிக்கையளித்த இந்தச் செங்கொ டியை எங்களுக்குத் தாருங்கள், எங்கள் சிலி குரியில் இந்த கொடியை நாங்கள் ஏற்ற வேண்டும்” என்று தலைவர்களிடம் இருந்து  கொடியை வாங்கிச் சென்ற காட்சி, செங் கொடி இயக்கத்தின் மீதான நம்பிக்கையை உணர்த்துகிறது. இதுபோன்றே, இதே காலத்தில்தான், வேறு ஒரு நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து, ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த ரூபா பர்கி உள்ளிட்ட இரண்டு தொழிலாளர்கள் இறந்து போயினர். அந்த தொழிலாளி ஒருவரின் மனைவி ஐந்து மாத கர்ப்பிணி, இன்னொரு தொழிலாளியின் மனைவி எட்டு மாத கைக்குழந்தையோடு ஆதரவற்ற நிலையில் இருக்கிறார். கணவர் இறந்த துக்கத்தைக்கூட அனுபவிக்க விடாமல், அந்த நிறுவனத்தில் வாயிற்காப்பாளனாக இருந்த ஒரு கொடூரன் இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கிறான். எட்டு  மாத கைக்குழந்தையுடன், கணவன் மருத்து வமனையின் பினவறையில் இருக்க, இவளோ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி அசைவற்று கிடந்தாள். இத்தகவலை அறிந்த உடனே போராட்டத்தில் இறங்கி, அந்த குடும்பத்திற்கு நிவாரணமும், கொடூரனுக்கு சிறைத்தண்டனையும் பெற்றுத்தந்தது செங்கொடி இயக்கம். மேலும், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மற்றொரு பெண்ணை செட்டிபாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் வீடு எடுத்து தங்க வைத்து அவளை பராமரித்தது. குழந் தையும் பிறந்தது. குழந்தைக்கு நீங்கள்தான் பெயர் வைக்க வேண்டும் என்கிற அவரின் கோரிக்கையை ஏற்று, மார்க்சிஸ்ட் கட்சி யின் மூத்த தோழர் பிருந்தா காரத் அவர்களை நினைவு படுத்தும்விதமாக பிருந்தாகுமாரி என பெயர் சூட்டப்பட்டது, என்றார்.  சங்கத்தின் பொதுச்செயலாளர் மாரி முத்து கூறும் போது, 2019ம் துவங்கும்போது சில குறிப்பிட்ட ஆலைகளில் மட்டும் 87 தொழிலாளர்கள் மட்டும் இருந்தனர். பெருந் தொற்று காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலா ளர்களை சந்தித்து அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது. ஐஎஸ்எம்சி, இண்டோ செல்  போன்ற நிறுவனங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பி.எஃப்., பணிக்கொடை, பஞ்சப் படி உயர்வு போன்ற சலுகைகளைச் சங்கம் தலையிட்டுப் போராடிய பின்னரே மீண்டும் தொழிலாளர்களுக்குக் கிடைத்தன. இந்த ஆலையின் 75 தொழிலாளர்கள் பிஎம்எஸ் சங்கத்திலிருந்து வெளியேறி சிஐடியு சங்கத் தில் இணைந்தனர் என்றார். இன்று, அம்மா அலாய்ஸ் போன்ற நிறு வனங்களில் சங்க அங்கீகாரத்திற்கான போராட்டங்களும், ஒப்பந்தச் சுரண்டலை எதிர்த்த போராட்டங்களும் தொடர்கின்றன. நவம்பர் 9 அன்று கோவையில் நடைபெற உள்ள சிஐடியு மாநில மாநாட்டின் பேரணி யில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். தெற்குப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள், செங்கொடி இயக் கம்தான் தங்களின் நம்பிக்கை என்ற உணர் வோடு குடும்பத்தோடு அணிவகுத்து நிற்கத் தயாராகி வருகின்றனர். இத்தகைய வீரமிக்க தியாகங்களாலும், அற்பணிப்புடன் செயலாற்றிய தோழர்களின் உழைப்பாலும், செங்கொடி இயக்கம் கோவை மண்ணில் நிமிர்ந்து நிற்கிறது!