தீஒமு தலையீட்டால் உடல் அடக்கம்
ஈரோடு, செப். 29- ஈரோடு மாநகரில் பட்டியலினத்தவர் உடல் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அடக் கம் செய்யப்பட்டது. ஈரோடு மாநகரில் அம்பேத்கர் நகர் உள்ளிட்ட 3 ஊர் பட்டியலின மக்கள் நல்லி தோட்டம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தை மயானமாகப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அங்கு தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளார். இந்நிலை யில் செவ்வாயன்று அம்பேத்கர் நகர் பழனி (80) என்பவர் மரணமடைந்தார். அவரை புதைக்க சுடுகாட்டிற்குச் சென்ற போது கடை கட்டியவர் தடுத்துள்ளார். இதனையறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அப்பகுதிக்குச் சென்றனர். வட்டாட்சி யர் மற்றும் காவல்துறையினரும் அங்கு சென்றனர். அதன்பிறகு பழனியின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட் டது. களத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ததீஒமு மாவட்டச் செயலாளர் ஏ.கே.பழனிசாமி, துணை தலைவர் என்.பாலசுப்பிரமணி, பா.லலிதா, சி.பழனிசாமி, வி.சுரேஷ் பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.
