tamilnadu

img

உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.90 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு

உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.90 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு

திருப்பூர், ஆக.28- திருப்பூரில் உயர்கல்வியில் சேரும் 3,400  மாணவர்களுக்கு வங்கியின் மூலம் ரூ.90 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரி வித்துள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி முதல்வர்கள், கல்லூரி கண்காணிப்பு அலு வலர்கள் மற்றும் வங்கியாளர்களுடன் கல்வி  கடன் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே தெரிவித்ததாவது, திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேரும் 3,400 மாண வர்களுக்கு வங்கியின் மூலம் ரூ.90 கோடி  கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. டிச.31 வரை நான்கு கல்விக்கடன் முகாம்கள் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.  கல்வி கடன் வேண்டி விண்ணப்பிக்கும் மாண வர்களுக்கு ஆவணங்கள் சரிபார்த்து கல்விக் கடன் வழங்கப்படும். முதலாம் ஆண்டு மாண வர்கள் மட்டுமல்லாமல் இரண்டாம் ஆண்டு,  மூன்றாம் ஆண்டு கல்லூரியில் பயிலும் மாண வர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படும். மாணவர்கள் இளங்கலை மற்றும் முது கலை பட்டப் படிப்புகளுக்கு அரசின் வித்யா  லட்சுமி இணைய தளத்தில் www.pmvidya laxmi.co.in பதிவு செய்து வங்கிகளில் எளி தாக கல்விக்கடன் பெறலாம். 10 ஆம் வகுப்பு  மதிப்பெண் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழ், ஆதார் நகல், பேன் அட்டை  நகல், சாதி சான்றிதழ், கல்வி கட்டண விவரம்,  கலந்தாய்வு கடித நகல், கல்லூரி அடையாள  அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், ஆண்டு  வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றி தழ், 2 புகைப்பட்டம், வித்யாலட்சுமி இணைய  தளத்தில் பதிவு செய்த நகல் உள்ளிட்ட ஆவ ணங்களுடன் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகி கல்வி கடன் பெறலாம். மேலும்,  கல்லூரிகளில் மாணவர்களுக்கு சம்பந்தப் பட்ட கல்வி நிறுவனங்கள் கல்விக்கடன் தொடர்பாக ஆலோசனை மற்றும் வழிகாட்டு தல் வழங்க வேண்டும். மேலும், விவரங்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண்.17 ல் கல்விக்கடன் தொடர்பான உதவி மையத்தை நேரிலும், 0421-2971185  என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு  கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள் ளார்.