எடப்பாடிக்கு தமிழகம் பாடம் கற்பிக்கும்
ஆ.ராசா எம்.பி
மேட்டுப்பாளையம், ஜூலை 4- கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிர தமர் மோடி மேட்டுப்பாளையத்தில் தான் தனது பிரசாரத்தை துவங்கினார் அப்போது ஏற்பட்ட அதே நிலை தான் தற்போது வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மேட்டுப்பாளையத்தில் பிரசாரத்தை துவக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற் படும் என ஆ.ராசா எம்பி., தெரிவித் தார். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நகராட்சி சார்பில் வெள்ளியன்று முதல் காலை உணவு வழங்கும் திட்டம் துவக் கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற திமுகவின் துணை பொதுச் செயலாள ரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, “கடந்த ஒராண்டில் மட்டும் மேட்டுப்பாளையம் நக ராட்சிக்கு என தனியாக புதிய குடிநீர் திட்டம், பேருந்து நிலையம் புதுப்பித்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணி களுக்காக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எவ்வளவு வேகமாக இந்த அரசு செயலாற்றி வருகிறது என் பதற்கு இதுவே சிறந்த உதாரணம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமி ழகத்தில் பிரதமர் மோடி மேட்டுப்பாளை யத்தில் தான் பிரசாரத்தை துவக்கினார். அவருக்கு அன்று தமிழகத்தில் ஏற்பட்ட நிலை தான் தற்போது மேட்டுப்பாளை யத்திலிருந்து சட்டமன்ற தேர்தலுக் கான பிரசாரத்தை துவக்க வரும் எடப் பாடி பழனிசாமிக்கும் ஏற்படும். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த லாக்கப் மர ணங்களின் போது எடுக்கப்பட்ட நட வடிக்கைக்கும் இன்று திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும் ஒப் பிட்டு பார்த்தாலே எது நல்லாட்சி என புரிந்து கொள்ளலாம் என்றார்.