சாலைப்பணியாளர் சங்கத்தின் வெள்ளி விழா
திருப்பூர், செப்.18 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் வெள்ளி விழா நிறைவு கொடியேற்றம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதனன்று திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் 26 ஆம் ஆண்டு சங்க உதய தினம் கொடியேற்றத்துடன் கொண் டாடப்பட்டது. திருப்பூர் கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம், தாராபுரம் கோட்டப் பொறியாளர் அலுவலகம், அவிநாசி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம், பல்லடம், காங்கேயம், தாராபுரம் கோட்டம் மூலனூர் உள்பட 10 இடங்க ளில் கொடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், மக்கள் அன் றாடம் பயன்படுத்தும் மூலனூர் கடைவீதியில் உள்ள பயணி கள் நிழற்குடைக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. உடுமலைப்பேட்டை நேரு வீதியில் உள்ள மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு பயன்பாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில், சாலை பணியாளர் சங் கத்தின் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு பொருட்கள் வழங்கினர். பின்னர் உடுமலைப்பேட்டை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கொடியேற்றப்பட் டது.