வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரிக்கை
திருப்பூர், ஜூன் 7 - பல்லடம் தாலுகா மாணிக்காபு ரம் பகுதியில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாணிக்காபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, இப்பகுதியில் உள்ள பூமி தான நிலம் பு.எண் 51 ல் உள்ள 8.18 ஏக்கர் நிலத்தில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம் அமைப்பதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வர்களுக்கு ஆட்சேபனை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிலத்தை வகை மாற்றம் செய் வதற்கான நடைமுறைகளை மேற் கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இங்கு எரிவாயு உற்பத்தி மையம் அமைக்கும் பட்சத்தில், பொதுமக்கள் கடுமையாக பாதிக் கப்படுவார்கள். மேலும் காற்று மாசு பாடு மற்றும் வாயு கசிவு பிரச்சனை கள் ஏற்படும். வீடற்ற ஏழைகளுக்கு இலவச நிலம் வழங்கக்கோரி வரு வாய்த்துறைக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இந்நிலையில் இங்கு உயிரி எரி வாயு மையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வது மிக வும் வேதனைக்குரியது. எனவே பூமி தான நிலத்தில் உயிர் எரிவாயு உற் பத்தி மையம் அமைப்பதை கைவிட வேண்டும். மேலும், இந்த நிலத்தில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நண்பர்கள் ஆட்டோ சங்கம் சார் பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 8 ஆண்டுகளாக டிகேடி மில் பேருந்து நிறுத்தம் அருகில் ஆட்டோ ஓட்டி வந்தோம். ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ் என்பவர் காலமாகிய பிறகு சங்க தேர்தல் வைத்து புதிய தலைவராக வந்த பன் னீர் எங்களை ஆட்டோ ஓட்டக்கூ டாது என்று வெளியே அனுப்பிவிட் டார். அதன்பிறகு 10 நபர்கள் இணைந்து புதிதாக இரண்டு ஸ்டாண்ட் அமைத்து ஆட்டோ ஓட்டி வருகிறோம். இந்நிலையில் டிகேடி முதல் கணபதிபாளையம் வரை நீங் கள் யாரும் ரோட்டில் ஆட்டோ ஓட்டக் கூடாது என்று கொலை மிரட்டல் விடு கின்றனர். இதனால் எங்கள் 10 குடும் பத்தை சேர்ந்த நபர்களும் எந்த வாழ் வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள் ளோம். எனவே எங்களை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நிலத்தை அளந்து கொடுக்கும் படி மனு: திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, வள்ளிபுரம் கிராமத்தில் 250 மேற்பட்ட இந்து அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள் வசித்து வரு கிறோம். இந்நிலையில் குடியிருப் பதற்கு வீடு இல்லாமல் வள்ளிபுரம் பிரிவு அருகே உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தோம். 2007 ல் திருப்பூர் அரசு நிர்வாகம் அந்த இடத்தை விட்டு வெளியேறும்படி கூறியது. மறுப்பு தெரிவித்து வேறு இடம் இல்லாததால், அங்கேயே அர சிடம் போராடிக் கொண்டே குடி யிருந்தோம். 2008 ல் எங்களுக்கு நிலத் திற்கான பட்டாவை தயார் செய்து வந்துள்ளதாகவும், உங்களுடைய நிலம் பள்ளிக்கு அருகில் வழங்கப் பட்டுள்ளது என்று கூறிவிட்டு பட் டாவை கண்ணில் கூட காட்டாமல் எடுத்து சென்றுவிட்டனர். அதில் யாருக்கு பட்டா உள்ளது என்று கூட தெரியவில்லை. நாங்களும் அரசிடம் பல முறை ஒதுக்கிய நிலத்தை அளந்து கொடுங்கள். குடிசை போடு கிறோம் என்று அப்போது இருந்த கிராம நிர்வாகியிடம் கூறினோம். ஆனால் அரசு எந்த முயற்சியும் எடுக் கவில்லை. நாங்களும் குடியிருந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட் டோம். அரசு நிலத்தை ஒதுக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உறவினர்கள் வீடுகளிலும், ஒரே வீட் டில் மூன்று குடும்பங்களும், சிலர் குடி யிருப்பதற்கு நிலம் இல்லாமல் பல் வேறு பகுதியில் ஆங்காங்கே உள்ள உறவினர்களின் வீட்டில் தங்கி வாழ்ந்து வந்தனர். கடந்த 2021 வள்ளி புரம் கிராம நிர்வாகி கிராமத்திற்கு நேரில் வந்து ந.க.எண் 2629/2021 /அ/2 என்ற நோட்டீசை எங்களிடம் கொடுத்தார். அப்பொழுதுதான் எங் களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலத் தில் சர்வே எண் 103/2 என்றும் வீட்டு மனை பட்டா எண்ணும் அதில் குறிப் பிட்டு இருந்தது. ஆனால் அந்த பட் டாவுக்கான எந்த கண்டிஷன் எது வும் எங்களுக்கு தெரியாது. பட்டா வையும் இதுவரை எங்களுக்கு காட்ட வில்லை. அதில் 15 வருடங்களாக தங் களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டாததினால் நிலத்தின் ஒப்ப டைவை ரத்து செய்வது என முடிவு செய்துள்ளோம். மேற்கண்ட வீட்டு மனை ஒப்படையை ஏன் ரத்து செய் யக்கூடாது என்பதற்கான விளக்கத் தினை 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. அதன்பின் அவிநாசி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். தயவு கூர்ந்து எங்களுக்கு என்று ஒதுக்கப் பட்ட நிலத்தை எங்களுக்கு ஒதுக்கி, நிலத்தை அளந்து கொடுக்கும்படி அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.