படிக்கட்டில் தொங்கியபடி பயணம் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
கோவை, ஜூலை 1- பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி பய ணிக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இப்பகுதி யில் கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் பேருந்து நிலையத் தில் இருந்து காரமடை, தாயனூர், வெள்ளியங்காடு வழியாக ஆதிமாதையனூர் வரை செல்லும் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை எட்டு மணியள வில் புறப்படும் இப்பேருந்தில் காரமடை பகுதியில் இருந்து தாயனூர், புஜங்கனூர் மற்றும் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவி யர்கள் பெருமளவு பயணித்து வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று காலை காரமடையி லிருந்து வெள்ளியங்காடு நோக்கி சென்ற பேருந்தில் கூட்டம் காரணமாக மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படி ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். இதனை பின் னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போன் மூலம் படம் பிடித்து பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் மற் றும் பிற வேலைகளுக்கு செல்வோர் காலை நேரத்தில் இவ் வழித்தடத்தில் ஓடும் இந்த தனியார் பேருந்தை நம்பி உள்ள தால் இப்பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க போக்கு வரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.