முன்பணத்தை திரும்ப வழங்காத நிறுவனம் மீது வாடகை கார் ஓட்டுநர்கள் புகார்
கோவை, ஆக.21- ஓட்டுநர்களிடம் பெற்ற ரூ.1.5 லட்சம் முன் பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி விமான நிலைய வாடகை கார் ஓட்டுநர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகா ரளித்தனர். கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாடகை கார் இயக்கவும், புக்கிங் செய்யவும் இடிஎஸ் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்திருந்தது. இதில் கோவையைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வாடகை கார் ஓட்டுநர்கள் பதிவு செய்து தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை முன்பணம் செலுத்தினர். மேலும், ஒவ்வொரு வாரமும் கட்டணமாக ரூ.3,500 செலுத்தி வந்தனர். 3 ஆண்டுகள் போடப்பட்ட ஒப்பந் தம் நிறைவடைந்த நிலையில், இம்முறை வேறு நிறுவனம் வாடகை கார் நிறுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தை எடுத் துள்ளது. இதனால் ஏற்கனவே இ.டி.எஸ் நிறுவனம் சார்பில் விமான நிலையத்தில் வாடகை கார் ஓட்டி வந்த ஓட்டுநர்கள் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், வாடகை கார் ஓட்டுநர்களிடம் திரும்ப செலுத்துவதாக கூறிய முன் பணத்தை வழங்குமாறு, அந்நிறுவனத்திடம் கேட் டுள்ளனர். ஆனால் முன் பணத்தை கொடுக்க முடியாது என மறுத்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விமான நிலைய வாடகை கார் ஓட்டுநர்கள் தங்களது முன் பணத்தை திரும்ப பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பீள மேடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மேலும், சேமிப்பு பணத்தில் கட்டிய முன் பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்றனர்.