tamilnadu

img

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்

கோவை, ஜூலை 2- சூலூரில் ரூ.2.09 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும்  பணி தொடங்கப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சி யில், ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மழைநீர் வடி கால் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா புதனன்று சரஸ்வதி  நகர் பகுதியில் நடைபெற்றது. சூலூர் பேரூராட்சிக்குட்பட்ட கலங்கல் சாலை முதல் புங்கன் குட்டை வரை மழைநீர் வடி கால் அமைக்கும் இப்பணியை, திமுக மாவட்டச் செயலாளர்  தளபதி முருகேசன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில்,  பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், துணைத்தலைவர் சோலை கணேஷ், திமுக ஒன்றியச் செயலாளர் மன்ன வன், கவுன்சிலர் பசுமை நிழல் விஜயகுமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர். புதிய மழைநீர் வடிகால் அமைப்பின்  மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் நீர் தேக்கம் தவிர்க்கப் பட்டு, பொதுமக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.