கோவில் குடமுழுக்கு நிகழ்வில் தகராறு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
நாமக்கல், ஜூலை 7 – திருச்செங்கோடு செங்கோடம்பாளையத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முனீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில், இரட்டை கருவறையுடன் இருப்ப தாகக் கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ள இந்தக் கோவிலில், வரும் 13-ஆம் தேதி குட முழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், அதே ஊரில் உள்ள மற்றொரு பிரிவினர் கோவிலில் வழி பாடு செய்யவோ அல்லது உரிமை கோரவோ கூடாது எனத் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு சமுதாயத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கோழிக்கால்நத்தம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செங்கோடு நகர போலீசார், மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்.டி.ஓ முன்னி லையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என போலீ சார் உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியல் கைவிடப் பட்டது.
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ரூ.2.07 லட்சம் திருட்டு
மேட்டுப்பாளையம், ஜூலை 7- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பிரச் சார கூட்டத்தில் அதிமுக நிர்வாகி மற் றும் காவலரிடம் ரூ.2.07 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “மக்களை காப்போம், தமிழ கத்தை மீட்போம்” என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளரும், முன் னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி திங்களன்று பிரச் சாரத்தை மேட்டுப்பாளையத்தில் துவக்கினார். முன்னதாக மேட்டுப் பாளையம் அடுத்துள்ள தேக்கம் பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தனியார் திருமண மண்ட பத்தில் எடப்பாடி பழனிச்சாமி விவசா யிகள் மற்றும் நெசவாளர்கள் இடையே கலந்துரையாடினார். அப்போது, மண்டபத்திற்கு எடப் பாடி பழனிசாமியை வரவேற்பதற் காக காத்திருந்த தேவனாபுரம் பகுதியை சேர்ந்த காரமடை அதிமுக ஒன்றிய பொருளாளரும், முன்னாள் தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவருமான தங்கராஜ் என்பவரி டம் பேண்ட் பாக்கெட்டில் வைக்கப் பட்டிருந்த ரூ.1 லட்சத்தை அடையா ளம் தெரியாத நபர்கள் பிளேடால் கிழித்து பிக் பாக்கெட் அடித்துள்ள னர். இதே போல் நெல்லித்துறை பகு தியை சேர்ந்த வாழைக்காய் வியா பாரியும் அதிமுக நிர்வாகியுமான ஆனந்த் என்பவரிடம் ரூ.1 லட்சம் மற் றும் அபு என்பவரிடம் ரூ.2500 ரொக்க பணத்தை அடையாளம் தெரியாம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது மட்டுமின்றி உளவுத்துறை பிரி வில் பணிபுரிந்து வரும் காவலர் ஒரு வரிடமும் ரூ.4,500 பணம் திருடப் பட்டு உள்ளது. இதனால் கூட்டத்திற்கு வந்த அதி முக நிர்வாகிகள் மற்றும் தொண் டர்கள் இடையே சலசலப்பு ஏற்பட் டது. இந்த துணிகர திருட்டு மேட்டுப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து விசா ரணையை போலீசார் துவக்கினர். இதனிடையே, எடப்பாடியின் பிரச்சாரப் பயணத்தில் பாஜகவினரும் பங்கேற்று வரவேற்பு தெரிவித்த நிலையில், மொத்த திருட்டு கூட் டத்தையும் பக்கத்தில வச்சு இருந்தா, நாமதான் நம்ம பணத்தை பத்தி ரமா பாத்துக்கனும் என்று அதிமுக வினர் கிண்டலடித்தபடியே எடப்பாடி யின் பின்னால் சென்றனர். முன்னதாக எடப்பாடி பழனிசாமி யின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு பாதுகாப்பில்லாமல் சரக்கு வாக னங்களில் பொதுமக்கள் அழைத்து வரப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரு கிறது.
அணைகள் நிலவரம்
பவானி சாகர் அணை
நீர்மட்டம்:95.05/105 அடி நீர்வரத்து:3251 கனஅடிநீர் திறப்பு:1305 கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:60.40/72 அடிநீர்வரத்து:2061கனஅடிநீர்திறப்பு:60கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:117/120அடிநீர்வரத்து:708கனஅடிநீர்திறப்பு:263கனஅடி
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்:47.37/60அடி நீர்வரத்து:66கனஅடிநீர்திறப்பு:29கனஅடி