தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு பாராட்டு
ஈரோடு, அக்.4- தலைக்கவசம் அணிந்து வந்தவர்க ளுக்கு ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பாராட்டு தெரிவித்தார். ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலைய சரகத்தில் 100 இடங்களை தேர்வு செய்து காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தலைக்கவசம் அணிவதன் முக்கி யத்துவத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சனியன்று நடத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. சுஜாதா காளைமாட்டு சிலை அருகே விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தலைக் கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார். தலைக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், சிறுவர்கள் வாகனத்தை ஓட்ட பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. வாகன ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாக னத்தை ஓட்டக்கூடாது என அறிவுறுத்தப் பட்டது.
