tamilnadu

img

நாமக்கல்லில் தலைதூக்கும் சிறுநீரக விற்பனை விசைத்தறி தொழிலாளர்கள் குறிவைப்பு!

நாமக்கல்லில் தலைதூக்கும் சிறுநீரக விற்பனை விசைத்தறி தொழிலாளர்கள் குறிவைப்பு!

- எம்.பிரபாகரன்  நாமக்கல், ஜூலை 17 – நாமக்கல் மாவட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரக விற்பனை செய்யும் கும்பல் மீண்டும் தலை தூக்கியுள்ள சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. உழைப்பாளி மக்களின் உழைப்பை சுரண்டும் கூட்டம் பெருகி வரும் நிலையில், இதன் அடுத்த இடியாக விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரகங்களை அகற்றி விற் பனை செய்யும் சம்பவம் நாமக் கல் மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமார பாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் வறு மையில் வாடுகின்றனர். இந்த வறு மையை பயன்படுத்தி, இடைத்தர கர்கள் மூலம் பெங்களூரு, கொச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறுநீர கங்கள் அகற்றப்பட்டதாகவும், பேசிய பணம் முழுமையாகக் கிடைக்கவில்லை எனவும் பாதிக் கப்பட்ட பெண்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற சிறுநீரக விற் பனை மோசடிகள் நாமக்கல்  மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந் தன. அப்போது இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டதோடு, மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டு இத்தகைய சட்டவிரோத செயல் களைத் தடுத்து நிறுத்தியது. இருப் பினும், தற்போது மீண்டும் அதே அவலம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையம் அன்னை  சத்யா நகரைச் சேர்ந்த விசைத் தறி தொழிலில் ஈடுபட்டு வரும் பெண்களை இடைத்தரகர்கள் பெங்களூரு, கொச்சி ஆகிய நக ரங்களில் உள்ள தனியார் மருத்து வமனைகளுக்கு அழைத்துச் சென்று சிறுநீரகங்களை விற் பனை செய்துள்ளனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பெரம்பலூரில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டு, தனது சிறுநீர கத்தை விற்றது தெரியவந்துள் ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த தகவலின்படி, சிறுநீரகம்  விற்பனை செய்வதன் மூலம் ரூ. 10  லட்சம் பெற்றுத் தருவதாக இடைத் தரகர்கள் ஆசை வார்த்தை கூறி யுள்ளனர். ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேசிய தொகை முழுமையாகக் கிடைக்க வில்லை என்றும், இடைத்தரகர் கள் மோசடியில் ஈடுபட்டதாக குற் றம்சாட்டுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக நாமக்கல் வட்டாரத்தில் விசைத் தறி தொழில் நலிவடைந்துள்ள தால், அதனை நம்பியிருக்கும் லட் சக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். குடும்பச் சூழ் நிலையை சமாளிக்க கந்துவட்டி, மீட்டர் வட்டி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் வாங்கியுள்ள நிலையில், வேலையின்மை காரணமாக கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். கடன் கொடுத்த நிறுவனங்களின் தொடர் தொல்லைகளால் வேறு  வழியின்றி, தங்கள் கடனை அடைப்பதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்யும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிறுநீரக விற்பனை குறித்த தக வல்கள் வெளியான நிலையில், குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் மாவட்ட சுகாதார திட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். சிறுநீரக விற்பனையில் இடைத்தரகராக செயல்பட்ட தாக கூறப்படும் ஆனந்தன் என்ப வரை விசாரிப்பதற்காக அதிகாரி கள் அவரது வீட்டிற்குச் சென்ற போது, அவர் தலைமறைவாகி விட்டார். வீடும் பூட்டப்பட்டிருந்த தால், அக்கம்பக்கத்தில் உள்ள வர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பள்ளி பாளையம் அரசு மருத்துவமனை சார்பில் பள்ளிபாளையம் காவல்  நிலையத்தில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது. இந்தப் புகாரின்  அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகள் மூலம் இந்த  அதிர்ச்சி தகவல் வெளியானதை யடுத்து, நாமக்கல் வட்டாரத்தில் மீண்டும் சிறுநீரக விற்பனை குறித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வறுமையின் பிடியில் சிக்கி யுள்ள விசைத்தறி தொழிலாளர்க ளின் இந்த அவலநிலையைத் தடுக்க அரசு மற்றும் தன்னார்வ  நிறுவனங்கள் இணைந்து உடனடி  மற்றும் உறுதியான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத செயல் களைத் தடுப்பதோடு, விசைத்தறி  தொழிலாளர்களுக்கு வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் திட்டங் களையும் முன்னெடுக்க வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.