இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வருடங்களாக அலைச்சல்: எல்லப்பாளையம்புதூர் பகுதி மக்கள் வேதனை
காங்கயம், செப்.19 – இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு 7 வரு டங்களாகியும் பட்டா கிடைக்காததால், கோரிக்கை விடுத்த மக்கள் வேதனை தெரி வித்துள்ளனர். காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபா ளையம் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்கள் குடியிருக்க சொந்த வீடு இல்லாததால், கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். ஆனால், இன்று வரை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 20 குடும் பங்களைச் சேர்ந்த பொதுமக்கள், காங்கயத் தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவ லகம் முன்பு வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு தலைமை வகித்த ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் இது பற்றி கூறுகை யில், எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி புள் ளக்காளிபாளையம் பகுதியில் சொந்த வீடு இல்லாத 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த 2018 ஆம் ஆண்டு இலவச வீட்டும னைப் பட்டா வழங்க வலியுறுத்தி காங்க யம் வட்டாட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகிய அலுவலகங்களில் 7 ஆண்டுகளாக கோரிக்கை மனு கொடுத்து வந்தனர். இது தொ டர்பாக காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட் டம், முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட வழி களிலும் போராடி வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு திருப்பூர் அருகே கொடுவாயில், மேற்கண்ட 20 பேருக்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்பட்டது. இந்தப் பட்டா வழங்கப்பட்ட பின்னரும் பல மாதங்களாக பட்டாவுக்கு உரிய நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. எனவே நிலத்தை அளந்து கொடுக்க வலியுறுத்,தி எல்லப்பா ளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட் டோம். அப்போதைய காங்கயம் வட்டாட்சி யர் உடனடியாக போராட்ட இடத்துக்கு வந்து, விரைவில் நிலத்தை அளந்து கொடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, காத்தி ருப்பு போராட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, நில அளவீடு செய் யப்படவுள்ள நிலத்தைப் பார்த்த 20 பட்டாதா ரர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அந்த நிலம் மண் மேடாக, வீடு கட்டி வசிப்ப தற்குத் தகுதியற்ற இடமாக இருந்தது. இத னால் அதிருப்தியடைந்த பயனாளிகள், வேறு இடத்தில் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்கு மாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்த னர். இந்த நடவடிக்கைக்காக, மேற்கண்ட 20 பேரின் அசல் பட்டாக்களை காங்கயம் வட் டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் தற்போது வரை வேறு புதிய இடத்திற்கான பட்டா வழங்கப்பட வில்லை. புதிய இடத்திற்கான பட்டா வழங்க வலியுறுத்தி, காங்கயத்தில் உள்ள ஆதிதிரா விட நலத்துறை தனிவட்டாட்சியர் அலுவல கம் முன்பு தற்போது காத்திருப்பு போராட்டத் தில் விடுபட்டிருப்பதாக கூறினார். இது குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட் டாட்சியர் ஜெகஜோதி கூறியபோது, மேற் கண்ட 20 குடும்பங்களுக்கும் புதிய இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. அவர்களுக்கான பட்டாவும் தயார் நிலை யில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நடை பெறவுள்ள அரசு நிகழ்ச்சியின் போது, அமைச்சர் தலைமையில் இவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதையடுத்து, காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்ட புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
