tamilnadu

img

டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடுக

டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடுக

ஈரோடு, ஆக.16- டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு வலியு றுத்தியுள்ளது.  சிஐடியு ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின்  19 ஆம் ஆண்டு மாநாடு வெள்ளியன்று ஈரோடு சிபிஎம் அலு வலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். ஆர்.ஆறுமுகம் கொடியேற்றினார். எஸ்.பழனிசாமி வரவேற்றார். சம்மேளன துணை பொதுச் செயலாளர் ஏ.ஜான் அந்தோணிராஜ் தொடக்க உரையாற்றி னார். சங்க பொதுச் செயலாளர் வி.பாண்டியன் வேலைய றிக்கை சமர்பித்தார். பொருளாளர் கே.ரவிசந்திரன் வரவு செலவு அறிக்கை வைத்தார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ். சுப்ரமணியன் நிறைவுரையாற்றினார். இம்மாநாட்டில், மிகக் குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்க ளுக்கு பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடை  செயல்படும் நேரத்தை 12-8 என மாற்றியமைக்க வேண்டும்.  இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக என்.முருகையா, பொதுச்செயலாளராக கே. ரவிச்சந்திரன், பொருளாளராக பி.அர்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளர்களாக வி.ராஜேந்திரன், கே.பி.பாக்கியராஜ், துணைத்தலைவர்களாக 5 பேர், துணைச்செயலாளர்களாக கொண்ட நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. நிறை வாக, வி.சண்முகம் நன்றி கூறினார்.