சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
கோவை, ஜூலை 6- கோவையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், கல்லீரல், சிறுநீர கம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அவர்களது குடும்பத்தி னர் தானம் செய்ய முன் வந்த செயல் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்காநல்லூர் வேலன் நகரைச் சேர்ந்த யோகானந்தன், கடந்த செவ்வாயன்று சாலை விபத்தில் சிக்கினார். தலை யில் பலத்த காயங்களுடன் கோவை கே.ஜி. மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி யோகானந் தனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த னர். யோகானந்தனின் மூத்த சகோதரி சகானா, கே.ஜி. மருத்து வமனையிலேயே மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த துயரமான சூழ்நிலையிலும், யோகானந்தனின் குடும்பத் தினர் அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த னர். இதையடுத்து, அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப் பட்டு, இவ்வுறுப்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.