tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் புத்தாக்க மையத்தில் பயிற்சி பெற உத்தரவு

மேட்டுப்பாளையம், ஜூலை 2- பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தது தொடர்பாக, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் போக்குவரத்து புத் தாக்க மையத்தில் பயிற்சி பெற போக்குவரத்து துறையி னர் உத்தரவிட்டுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து வெள்ளியங்காடு வழியாக ஆதிமாதையனூர் வரை,  தனியார் பேருந்து ஒன்று செவ்வாயன்று காலை சென்று  கொண்டிருந்தது. பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் பள்ளி மாணவர்கள் படிக்கட் டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்த னர். இதனை பேருந்தின் பின்னால் சென்ற வாகன ஓட்டி  ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக  வலைத்தளங்களில் பதிவு செய்தார். இது வைரலாகிய  நிலையில், கோவை ஆட்சியரின் உத்தரவின்படி, அந்த  பேருந்தை மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் சத்தியகுமார் புதனன்று பறிமுதல் செய்தார். விதிமுறைகள் பின்பற்றாத பேருந்திற்கு அப ராதம் விதிப்பதற்கான வழிமுறைகள் மேற்கொண்டுள் ளதோடு, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பொள் ளாச்சியில் உள்ள போக்குவரத்து துறை புத்தாக்க பயிற்சி மையத்திற்கு சென்று போக்குவரத்து விதிமுறை கள் குறித்து அறிந்து கொள்வதற்காக இரு தினங் கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெறவும்  உத்தரவிட்டார்.

வீட்டில் தீ விபத்து: பொருட்கள் சேதம்

தருமபுரி, ஜூலை 2- அரூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.4 லட்சம்  மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந் தன. தருமபுரி மாவட்டம், அரூர், பெரியமண்டி தெருவைச் சேர்ந்தவர் விஜயா (50). இவர் செவ்வாயன்று தனது வீட்டை  பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலை யில், அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு ஜன்னல் வழியாக புகை வெளியேறுவது குறித்து அரூர் தீயணைப்பு நிலை யத்திற்கு பொதுமக்கள் தகவளித்தனர். அதன்பேரில் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர், தீயை அணைத்த னர். இருப்பினும், ரூ.4 லட்சம் மதிப்பிலான மின்னணு சாத னங்கள், மரப்பொருள்கள் தீக்கிரையாகின. இச்சம்பவம் குறித்து அரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை

தருமபுரி, ஜூலை 2- பென்னாகரத்தில் கோவில் கோபுர கலசங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் மிகவும் பழமைவாய்ந்த திரிபுரசுந்தரி சமேத திரியம் பிகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோ வில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கலசங்க ளில் இரண்டை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்  சென்றுள்ளனர். மீதமுள்ள ஒரு கலசத்தை செவ்வா யன்று இரவு திருட முயன்றபோது பொதுமக்கள் கண் காணித்ததால் அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி யோடிவிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தக வலின்பேரில் பென்னாகரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

கள்ளப்பாளையம் தொடக்கப்பள்ளி மாநில அளவில் தேர்வு

கோவை, ஜூலை 2- 100 நாள் அறைகூவல் திட்டத்தில், மாநில அளவில் கள்ளப்பாளையம் தொடக்கப்பள்ளி தேர்வாகியுள்ளது. தமிழக அரசின் கல்வித்துறை சார் பில் 100 நாள் அறைகூவல் திட்டம், மாண வர்களின் தமிழ் மற்றும் ஆங்கில வாசிப்புத்திறன் மற்றும் கணிதப் பாடத் தில் அடிப்படைத் திறன்களை மேம் படுத்துவதை நோக்கமாகக் கொண்டு  முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட திறன் மதிப்பீட்டு  அளவில், சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய ஐந்து பள்ளிகள்  மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளன. இதில், கோவை மாவட்டம், சுல் தான்பேட்டை அருகே உள்ள கள்ளப் பாளையம் தொடக்கப்பள்ளி மாநில அளவில் தேர்வாகியுள்ளது. இந்த சாதனையைப் பாராட்டும் வகையில், ஜூலை 7 ஆம் தேதி திருச்சி தேசியக்  கல்வி வளாகத்தில், மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமை யில் பிரம்மாண்டமான விழா நடைபெற வுள்ளது. இந்த வெற்றி, பள்ளியின் ஆசி ரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற் றோர்களின் ஒருங்கிணைந்த முயற்சி களுக்கு கிடைத்த அங்கீகாரமாக அமைந்துள்ளது. இந்த சாதனை,  கள்ளப்பாளையம் தொடக்கப்பள்ளி யின் கல்வித் தரத்தையும், மாணவர் களின் திறமையையும் பறைசாற்றுவ தோடு, மற்ற பள்ளிகளுக்கு ஒரு முன் மாதிரியாகவும் திகழ்கிறது. இத் தகைய முயற்சிகள், தமிழகத்தில் கல்வி யின் தரத்தை உயர்த்துவதற்கு முக் கிய பங்காற்றும் என்பதில் ஐய மில்லை.

ரூ.3 லட்சம் மோசடி: ஊழியர் கைது

கோவை, ஜூலை 2- சூலூரில் உள்ள யமஹா ஷோரூமில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களிடம் பெற்ற ரூ.3  லட்சத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய் யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கோவை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (48)  என்பவர், சூலூரில் யமஹா ஷோரூமை நடத்தி வரு கிறார். இவரது ஷோரூமில், திருப்பூர், சின்னையன் கோவில் தெரு, ஜி.எச்.காலனியைச் சேர்ந்த ரிஷிநாத்  (30) என்பவர் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்  வாடிக்கையாளர்களிடம் இருசக்கர வாகனங்களுக் கான முன்பணம் மற்றும் பிற தொகைகளைப் பெற்று,  அதற்கான ரசீதுகளை வழங்கி, பணத்தை ஷோரூம் உரி மையாளரிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டு  வந்தார். கடந்த சில நாட்களாக ரிஷிநாத் வாடிக்கை யாளர்களிடம் பெற்ற பணத்தை தனது தனிப்பட்ட வங்கிக்  கணக்கில் செலுத்தி, ஷோரூமின் கணக்கில் பணம் செலுத்தியதாக பொய்யான கணக்கு வழங்கி வந் துள்ளார். மேலும், வாடிக்கையாளர்களிடம் பெற்ற முழுத் தொகைக்கும் ரசீது வழங்காமல், தவறான கணக் குகளைக் காட்டி சுமார் ரூ.3 லட்சம் கையாடல் செய்து  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து செல்வகுமார் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரிஷிநாத்தை  கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த னர்.

பணிச்சுமை காரணமாக பெண் காவல் அதிகாரி உயிரிழப்பு

நாமக்கல், ஜூலை 2- ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், காவல் நிலை யத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த காமாட்சி என்பவர், பேளுக்குறிச்சி காவல் பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் விஜயகுமார். இவர்களுக்கு விஜய  ரதிஸ் (16) என்ற மகனும், கார் ஷினியா (15) என்ற மகளும் உள்ள னர். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக காமாட்சி ஒரு  மாத காலமாக விடுமுறை எடுத்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பணிக்கு வந்த போது, அவ ருக்கு தொடர்ந்து இரவு பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரவு நேர பணிச்சுமை காரணமாக, என் னால் வேலை பார்க்க முடிய வில்லை. அரை நாள் விடுமுறை கேட்டால் கூட விடுமுறை தரமுடி யாது என்று ஆய்வாளர் கூறியதாக  தனது உறவினரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், செவ்வாயன்று இரவு பணி முடித்து விட்டு விடியற் காலை 2 மணியளவில் காமாட்சி ஓய்வறைக்கு சென்றுள்ளார். பிறகு  காலை 6 மணியளவில் எழுந்து தனது கணவர் விஜயகுமாாருக்கு போன் செய்து, என்னால் வர முடி யாது. அதனால் பிள்ளைகளை பள் ளிக்கு அனுப்புமாறு கூறியுள்ளார்.  இதன்பின் ஒரு மணி நேரம் கழித்து  அவரது கணவர் காமாட்சிக்கு இரண்டு முறை போன் செய்தும்  அவர் எடுக்கவில்லை. இதைய டுத்து ராசிபுரம் துணை காவல் கண் காணிப்பாளர் விஜயகுமாரை தொடர்பு கொண்டு, உங்களது மனைவி இறந்துவிட்டார் என்று  கூறியதையடுத்து, தனது உறவினர் களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு காமாட்சி இறந்து கிடப்பதை கண்ட அவ ரது உறவினர்கள், பணிச்சுமை  காரணமாகத்தான் இறந்துவிட்டார்.  அவர் இறந்ததும் ஏன் அரசு மருத்து வமனைக்கு எடுத்துச் செல்ல வில்லை? என போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதன்பின் காமாட்சியின் உடல் பிரேத பரிசோ தனைக்கா ராசிபுரம் அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட் டது. இச்சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சேலம், ஜூலை 2- சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக் கப்பட்ட நிலையில், மாநகர காவல் துறையி னர் மோப்பநாயுடன் தீவிர சோதனை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாநகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு, புதனன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் மோப்பநாயுடன் தீவிர சோதனை யில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆட்சி யர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப் பட்டு வருகிறது. தொடர்ந்து சேலம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதால், அங்கு வரும் பொது மக்களும், அதிகாரிகளும் அச்சமடைந்து வருகின்றனர்.

ரூ.3 லட்சம் மோசடி: ஊழியர் கைது

கோவை, ஜூலை 2- சூலூரில் உள்ள யமஹா ஷோரூமில் பணியாற்றிய ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களிடம் பெற்ற ரூ.3  லட்சத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய் யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கோவை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (48)  என்பவர், சூலூரில் யமஹா ஷோரூமை நடத்தி வரு கிறார். இவரது ஷோரூமில், திருப்பூர், சின்னையன் கோவில் தெரு, ஜி.எச்.காலனியைச் சேர்ந்த ரிஷிநாத்  (30) என்பவர் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவர்  வாடிக்கையாளர்களிடம் இருசக்கர வாகனங்களுக் கான முன்பணம் மற்றும் பிற தொகைகளைப் பெற்று,  அதற்கான ரசீதுகளை வழங்கி, பணத்தை ஷோரூம் உரி மையாளரிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டு  வந்தார். கடந்த சில நாட்களாக ரிஷிநாத் வாடிக்கை யாளர்களிடம் பெற்ற பணத்தை தனது தனிப்பட்ட வங்கிக்  கணக்கில் செலுத்தி, ஷோரூமின் கணக்கில் பணம் செலுத்தியதாக பொய்யான கணக்கு வழங்கி வந் துள்ளார். மேலும், வாடிக்கையாளர்களிடம் பெற்ற முழுத் தொகைக்கும் ரசீது வழங்காமல், தவறான கணக் குகளைக் காட்டி சுமார் ரூ.3 லட்சம் கையாடல் செய்து  ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து செல்வகுமார் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரிஷிநாத்தை  கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த னர்.