மாதர் சங்க தருமபுரி ஒன்றிய மாநாடு
தருமபுரி, ஜூலை 25- மாதர் சங்கத்தின் தருமபுரி ஒன்றிய மாநாட்டில் நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தருமபுரி ஒன்றிய 4 ஆவது மாநாடு, முத்து இல்லத்தில் வெள்ளியன்று ஒன்றியத் தலைவர் எஸ்.தமிழ்மணி தலைமையில் நடை பெற்றது. சங்கத்தின் கொடியை சிசிலி பேகம் ஏற்றி வைத் தார். மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் எம்.மீனாட்சி, பொருளாளர் கே.மாது ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.நிர்மலா ராணி வாழ்த்திப் பேசி னார். இம்மாநாட்டில், அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒகேனக் கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும் பணி யிடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங் கத்தின் ஒன்றியத் தலைவராக கே.பூபதி, செயலாளராக எஸ். தமிழ்மணி, பொருளாளராக கே.மாது, துணைத்தலைவர்க ளாக ஆர்.பொன்முடி, மாதேஸ்வரி, துணைச்செயலாளர்க ளாக எம்.மீனாட்சி, சத்யகலா உட்பட 15 பேர் கொண்ட ஒன்றி யக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஆர். மல்லகா நிறைவுரையாற்றினார்.