tamilnadu

img

பொன்னாபுரம் புதிய பள்ளியில் வசதிகளை ஏற்படுத்தி திறக்க மார்க்சிஸ்ட் கட்சி கிராமசபையில் கோரிக்கை

பொன்னாபுரம் புதிய பள்ளியில் வசதிகளை ஏற்படுத்தி திறக்க மார்க்சிஸ்ட் கட்சி கிராமசபையில் கோரிக்கை

திருப்பூர், ஆக.16 – திருப்பூர் ஒன்றியம் முதலிபாளை யம் ஊராட்சி பொன்னாபுரம் தொடக்கப்  பள்ளிக்கு ரூ.48 லட்சத்தில் புதிய வகுப் பறைகள் கட்டி முடிக்கப்பட்டும், மின்  வசதி, குடிநீர், கழிப்பிடம் இல்லாத தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. உடனடி யாக இந்த வசதிகளை ஏற்படுத்தி  பள்ளிக் கட்டிடத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கிராம சபையில் வலியுறுத்தினர். முதலிபாளையம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் சுந்திர தினமான வெள்ளி யன்று நடைபெற்றது. இதில் மார்க் சிஸ்ட் கட்சியின் பொன்னாபுரம் கிளைச்  செயலாளர் ஆ.செல்வன் அளித்த மனு வில், பொன்னாபுரம் பள்ளியில் 50 மாணாக்கர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதுமான அடிப்படை  வசதிகள் இல்லாமல், மழைக் காலங்க ளில் பள்ளிக்குள் மழைநீர் வந்து விடு கிறது. எனவே, மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்த அடிப்ப டையில் கூடுதல் வகுப்பறைகள் தனி யாக கட்டப்பட்டுள்ளன. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு 42.50 லட்சம் மதிப்பில் வகுப்பறை களுடன், ரூ.5.48 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவரும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பள்ளி வகுப்பறை கட்டிடங் களில் மின் வசதி மற்றும் குடிநீர், கழிப் பறைகள் கட்டப்படவில்லை. இதனால்  புதிய கட்டிடத்தை பயன்படுத்த முடியா மல் பழைய நிலையே தொடர்கிறது.எனவே உடனடியாக மின் வசதி, குடி நீர், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுத்து, பள்ளிக் கட்டிடத்தைத் திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டுள்ளார். பேருந்து கோரிக்கை இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்க திருப்பூர் தெற்கு ஒன்றியத் தலை வர் எஸ்.ஜானகி தனி அலுவலருக்குக் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: முதலிபாளையம் ஊராட்சியில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திருப்பூர் நகரில் உள்ள  பள்ளிகளுக்குச் சென்று வருகின்றனர். ஆனால் காலை குறித்த நேரத்தில் அரசுப் பேருந்து வருவதில்லை. தனி யார் பேருந்துகள் பயணிக்க வேண்டிய  சூழ்நிலையில் நெருக்கடி அதிகமாகி,  மாணவிகள் மன உளைச்சலுக்கு  ஆளாகின்றனர். மாலை திருப்பூர்  பள்ளிகளில் இருந்து முதலிபாளையம் ஊராட்சிக்கு வரும் பேருந்துகளிலும்  இதே நிலைதான் நீடிக்கிறது. எனவே  மாணவ, மாணவிகள் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை முதலிபாளையம் ஊராட்சிக்கு இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.