tamilnadu

img

ஒத்துழைக்க மறுக்கும் நிர்வாகம்: 2 ஆவது நாளாக சுமைப்பணித் தொழிலாளர்கள் போராட்டம்

ஒத்துழைக்க மறுக்கும் நிர்வாகம்: 2 ஆவது நாளாக சுமைப்பணித் தொழிலாளர்கள் போராட்டம்

திருப்பூர், செப்.10- பேச்சுவார்த்தைக்கு வர மறுக் கும் லாரி புக்கிங் நிறுவனத்தைக் கண்டித்து, திருப்பூரில் சுமைப் பணித் தொழிலாளர்கள் புதனன்று 2  ஆவது நாளாக போராட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி சிட்கோ பகுதியில் செயல்பட்டு வரும் கோல்டன் லாரி புக்கிங்  ஆபீஸ் நிறுவனத்தில் செவ்வா யன்று பணியாற்றி வந்த 17 சுமைப் பணி தொழிலாளர்களுக்கு வேலை  மறுக்கப்பட்டது. வடமாநிலத்திலி ருந்து அழைத்து வரப்பட்ட தொழி லாளர்களைக் கொண்டு சரக்கு களை ஏற்றி இறக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது. இதற்கு ஏற் கனவே பணியாற்றி வந்த சுமைப் பணி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். இதைத்தொடர்ந்து சிஐ டியு, ஏஐடியுசி மற்றும் ஏடிபி உள் ளிட்ட தொழிற்சங்கத்தினர் நிர்வா கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அதற்கு லாரி புக்கிங் நிறுவ னம் ஒத்துழைக்காத நிலையில்,  சுமைப்பணித் தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வடமாநில தொழிலாளர்களைக் கொண்டு சரக்குகளை ஏற்றி இறக் கும் பணி நடைபெற்றது. இது குறித்து தொழிலாளர்கள் மற்றும்  தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப் பினர். அப்போது, பேச்சுவார்த் தைக்கு வர முடியாது என நிர் வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, செவ்வாயன்று  லாரி புக்கிங் நிறுவனத்தை தொழி லாளார்கள் முற்றுகையிட்டனர். எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக் காத வகையில், மீண்டும் தொழிலா ளர்களை பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி, புதனன்று 2 ஆவது நாளாக போராட்டம் நடை பெற்றது. சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் பி.பாலன், ஏஐடியுசி மாவட் டச் செயலாளர் ஆறுமுகம், ஏடிபி செயலாளர் கண்ணபிரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.