tamilnadu

img

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக்.10- ஒன்றிய, மாநில அரசு நிதியில் உள் ளாட்சி அமைப்புகளுக்கு 30% நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். குறைந்தபட்ச கூலிச்சட்டம், அர சாணை 2டி எண்:62ன்படி, சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப் படையில், ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு மாதம் ஊதியம் ரூ.14,593, தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.12,593 வழக்க  வேண்டும். ஒன்றிய, மாநில அரசு நிதி யில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 30  சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண் டும். சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று  வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு ஊதியம் வழங்கு வதுடன், நிலுவைத்தொகையை அரியராக  வழங்க வேண்டும். கொரோனா தொற்று  காலங்களில் உயிரை பணயம் வைத்து முன்களப் பணியாளர்களாக பணி செய்த  ஊராட்சிப் பணியாளர்களுக்கு அரசு அறி வித்த மூன்று மாத கால ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கத்தினர் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.கண்ணன் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்ட உதவிச்செயலாளர் எம்.செங்கோடன் துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலு சாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். சிஐடியு மாவட்ட உதவிச்செயலா ளர் சு.சுரேஷ் வாழ்த்திப் பேசினார். இதில்  சங்கத்தின் மாவட்ட உதவிச்செயலாளர் மலர்கொடி, உதவித்தலைவர்கள் விஜய லட்சுமி, எஸ்.பூங்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.