திருப்பூரில் கடன் பெற்றவர்களின் வீட்டை இடித்து கந்து வட்டி கும்பல் அராஜகம்: இருவர் கைது
திருப்பூர், ஆக.16- திருப்பூரில் கடன் பெற்றவர்களின் வீட்டை முறைகேடாக பத்திரபதிவு செய்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், கந்து வட்டி கும்பல் வீட்டை இடித்து சூறையாடினர். இது தொடர் பாக இருவரை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் வெள்ளியங்காடு பகுதி யைச் சேர்ந்த மகாமணி (58), மனைவி சாந்தி (52). இவர்கள் 2020 ஆம் ஆண்டு பழனிச்சாமி என்பவரிடம் வட்டிக்கு ரூ.13 லட்சம் கடன் பெற்றுள்ளனர். மாதம் ரூ.22 ஆயிரம் வட்டி செலுத்தி வந்த நிலை யில், கொரோனா சமயத்தில் வட்டி தர முடியவில்லை. இந்நிலையில், பணம் பெற்றதற்கு அத்தாட்சியாக பத்திரப்ப திவு அலுவலகத்தில் அடமான கடன் என ஏமாற்றி, நிலத்தை கிரையம் செய்துள்ள னர். கடந்த 6 மாதம் முன்பு வீட்டு வரி செலுத்த சென்றபோது வீடு மணிகண் டன் என்பவர் பெயரில் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பழனிச்சாமியிடம் விசாரித் தபோது பெற்ற கடனுக்கு மாற்றாக தனது ஆதரவாளர் மணிகண்டன் என்ப வரது பெயருக்கு வீட்டை மாற்றி கிரயம் செய்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மகாமணி மற் றும் சாந்தியை பழனிச்சாமி தரப்பினர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து சாந்தி திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். இது தொடர்பாக விசாரணைக்கு ஆக.15 ஆம் தேதி இருதரப்பும் அழைக் கப்பட்ட நிலையில், சாந்தி மற்றும் அவ ரது உறவினர்கள் காவல் நிலையத் திற்கு சென்றுள்ளனர். அப்போது பழ னிச்சாமி தரப்பினர் நேரடியாக வீட்டிற்கு சென்று வீட்டின் முன்புறத்தை பொக் லைன் எந்திரம் மூலம் இடித்துள்ளனர். வீட்டின் உள்ளிருந்த மகள் ஜனனி கைக் குழந்தையுடன் வெளியே ஓடி வந்துள் ளார். மேலும், வீட்டினுல் நுழைந்த நபர் கள் பொருட்களை சூறையாடி கழி வறை கதவுகளை இடித்து தள்ளி உள்ள னர். இது தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், வழக்குபதிவு செய்த போலீசார் அத்துமீறி வீட்டை இடித்து சூறையாடிய பழனிச்சாமியின் ஆதர வாளர்கள் மணிகண்டன் மற்றும் பாண்டி இருவரை சனியன்று கைது செய்த னர்.